கோடை வெயில் தாக்கம்...அதிக அளவு முடி உதிர்வா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

First Published | Apr 24, 2023, 5:47 PM IST

இந்த கோடை வெயில் தாக்கத்தால்
நமது சருமம் மட்டும்மல்ல நமது தலை முடியும் பாதிப்படைகிறது. இதனால் முடி உதிர்வு, பொடுகு, இளநரை, கூந்தல் வளர்ச்சி, வறண்ட கூந்தல் போன்ற ஏராளமான பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த பிரச்சினைகளையெல்லாம் எதிர்கொள்ளும் ஒரே ஒரு பொருள் தான் கற்றாழை. கற்றாழையை பயன்படுத்தி உங்களது முடியை எப்படி வலுப்படுத்துவது என்பதை இந்த பதிவின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
 

கற்றாழையில் பல ஆரோக்கிய நன்மைகள் மறைந்துள்ளன. இதன் ஜெல் பல சரும பிரச்சனைகளையும் குறைக்கிறது. அதனால்தான் இது இயற்கை அழகு சாதனப் பொருள் என்று அழைக்கப்படுகிறது. கற்றாழை தோல் பராமரிப்புக்கு மட்டுமின்றி கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்த மருந்தாகும். 

கற்றாழை ஜெல்லை உங்கள் கூந்தலில் தடவினால் உங்கள் முடியை பலப்படுத்தும். பொடுகும் முற்றிலும் மறைந்துவிடும். உச்சந்தலையில் பொடுகு அதிகமாக முடி கொட்டும். முடி வளர்ச்சியும் நின்றுவிடும். 

இதையும் படிங்க: கோடையில் நீர்ச்சத்து குறைபாடு எவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தும் தெரியுமா? சிறுநீரக கற்கள் முதல் பெரிய லிஸ்ட்!!

Latest Videos


கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் தடவினால் அரிப்பு மற்றும் முடி உடைவது குறையும். மேலும் இது உச்சந்தலையின் மீது ஒரு பாதுகாப்பு அடுக்கு உருவாக்க உதவுகிறது. மாசுகள், தூசி மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற வெளிப்புற காரணிகளிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது.


கற்றாழையில் உள்ள ஈரப்பதம் கூந்தலை ஆரோக்கியமாக வைத்து, முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரோட்டியோலிடிக் என்சைம்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இதில்  வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலமும் நிறைந்துள்ளது. இவை முடி உதிர்வை குறைக்க உதவும்.

முடி உதிர்வை தடுக்க கற்றாழையை எப்படி பயன்படுத்துவது?

அலோ வேரா ஜெல் - வெங்காய சாறு:

முதலில் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து அதில் இரண்டு டீஸ்பூன் வெங்காயச் சாற்றைக் கலக்கவும். பின்னர் அதை முடியில் தடவவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம். இந்த பேக் முடி உதிர்வை குறைத்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

அலோ வேரா ஜெல் - தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் முடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்ற உதவுகிறது. இதற்கு இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து, முடியின் நுனி வரை மசாஜ் செய்யவும். இந்த பேக் உங்கள் தலைமுடியை பளபளப்பாக்கும். மேலும் மென்மையாகவும் வைத்திருக்கும். இது உங்கள் முடி வளரவும் உதவுகிறது.

click me!