ஆரஞ்சு தோலை வைத்து கரும்புள்ளி பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். இதற்கு 2 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி எடுத்து கொள்ளுங்கள். வீட்டிலேயே ஆரஞ்சு தோல் பொடி செய்ய முடியும். இதற்கு ஆரஞ்சு தோலை சில நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். முழுவதுமாக காய்ந்ததும் தோலை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். இதை தான் கரும்புள்ளிகள் மீது பயன்படுத்த வேண்டும். இப்போது இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு பொடியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். கரும்புள்ளிகளை நீக்க இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசலாம்.