முகம் அழகாக இருக்க வேண்டுமென்று யார்தான் விரும்ப மாட்டார்கள். ஆனால் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், தூக்கமின்மை, நீச்சத்துக் குறைபாடு போன்ற பல காரணங்களால் சருமம் வறண்டு விடும். இதை சரிசெய்ய என்னதான் பார்லருக்கு சென்றாலும் அது பலன் நீண்ட நாள் இருப்பதில்லை. ஆனால் வெண்ணெய் இதற்கு தீர்வளிக்கும். ஆமாங்க, வெண்ணெயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ போன்றவை அதிக அளவில் உள்ளதால் அவை சருமத்தை ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் வைத்திருக்கும். எனவே, முகத்தை பொலிவாக்க வெண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
26
வெண்ணெயும் வாழைப்பழமும் :
இதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு பழுத்த ஒரு வாழைப்பழம் மற்றும் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்தை பொலிவாக மாற்றும்.
36
வெண்ணெயும் ரோஸ் வாட்டரும் :
ரோஸ் வாட்டருடன் சிறிய அளவு வெண்ணெய் கலந்து அதை முகத்தில் தடவி வந்தால் சருமம் நீரேற்றமாகவும், ஈரப்பதத்துடன் இருக்கும். சருமம் ஈரப்பதத்துடனும், நீரேற்றமாகவும் இருந்தால் முகம் பொலிவாக தெரியும்.
வெள்ளரிக்காயுடன் வெண்ணெய் சேர்த்து பேஸ்ட் போலாக்கி அதை முகத்தில் தடவி வந்தால் சருமம் வறட்சி நீங்கி முகம் பொலிவாக மாறும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது ரொம்பவே நல்லது.
56
வெண்ணெயும் தேனும் :
சிறிதளவு வெண்ணெயுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து ஸ்கர்ப்பாக பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்தை பொலிவாக மாற்ற உதவும்.
66
வெண்ணெய் :
ஒருவேளை மேலே சொன்ன விஷயங்கள் உங்களால் செய்ய முடியவில்லை என்றால் தினமும் இரவு தூங்கும் முன் வெறும் வெண்ணெயை மட்டும் முகத்தில் தடவி வந்தாலே போதும். அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மென்மையாக்கும். பொலிவையும் தரும்.