சருமத்திற்கு ஏற்றபடி சோப்பு வாங்குவது எப்படி? பலர் அறியாத தகவல்

Published : Jun 12, 2025, 12:13 PM IST

உங்களது சருமத்திற்கு ஏற்ப சோப்பை தேர்வு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
How to Choose the Right Soap for Your Skin

 சோப்பு குளியலுக்கு பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள். சிலர் இதை தினமும் 2 அல்லது 3 வேலை கூட பயன்படுத்துகிறார்கள். சோப்பு பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிடலாம். ஏனெனில் அவர்கள் சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பாசிப்பயிறு குளியலுக்கு பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பயன்படுத்தும் சோப்பு உண்மையில் உங்களுக்கு நல்லதா? அல்லது நீங்கள் விளம்பரத்தை பார்த்து வாங்குகிறீர்களா? ஏனெனில் தற்போது சந்தையில் நூற்றுக்கணக்கான சோப்புகள் விற்பனையாகின்றன. எனவே உங்களது சருமத்திற்கு ஏற்ப சோப்பை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். இது குறித்த புரிதல் உங்களுக்கு இல்லையென்றால், கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

25
வறண்ட சருமம் உள்ளவர்கள் :

உங்களது சருமம் அதிகமாக வறண்டு இருந்தால் சருமத்தில் எண்ணெய் சுரப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். ஆகவே, உங்களுக்கு கிளிசரின் சேர்ந்த சோப்புகள் தான் நல்லது. இது ஆட்டுப்பாலில் உள்ளன. எனவே வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆட்டு பாலில் தயாரிக்கப்பட்ட சோப்பு பயன்படுத்துங்கள். அது உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

35
உணர்திறன் சருமம் உள்ளவர்கள் :

உணர் திறன் சருமம் உள்ளவர்களுக்கு மருந்து கடைகளிலேயே பல சோப்புகள் கிடைக்கின்றன. இத்தகையவர்கள் வாசனை மற்றும் நிறம் இல்லாத சோப்புகளை தான் பயன்படுத்த வேண்டும். ஆகவே நீங்கள் சரும மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு சோப்புகளை வாங்கி பயன்படுத்துங்கள்.

45
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் :

சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக உள்ளவர்கள் ஆன்டி பாக்டீரியல் சோப்புக்களை வாங்கி பயன்படுத்துங்கள். குறிப்பாக கருவேப்பிலை சாலிக அமிலம் கொண்ட சோப்புகள் சருமத்தில் இருக்கும் அதிக எண்ணெய் பசையை போக்கும். இது தவிர, லாவண்டர் மற்றும் டீ ட்ரீ ஆயில் கலந்த சோப்பு கலையும் வாங்கி பயன்படுத்தலாம். வேண்டுமானால் நீங்கள் சோப்புக்கு பதிலாக பாடிவாஷ் கூட பயன்படுத்தலாம்.

55
பல வருடங்கள் ஒரே சோப்பை பயன்படுத்தலாமா?

உங்களது சருமத்தின் தேவைகளை பொறுத்து ஒரே செருப்பை பல வருடங்கள் பயன்படுத்தலாம். ஆனால் வயது, ஹார்மோன் மாற்றங்கள் காலநிலை ஆகியவை சருமத்தை மாற்றிவிடும். உதாரணமாக இளமையில் உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் அதற்கு ஏற்ப சோப்பை பயன்படுத்தியிருப்பீர்கள், ஆனால் வயதான பிறகு வறண்ட சருமத்திற்கு அந்த சோப்பு பொருந்தாது. எனவே உங்களது சருமத்தின் தேவைகளை அவ்வப்போது மதிப்பீடு செய்யுங்கள் மேலும் மருத்துவரின் ஆலோசையுடன் சோப்பை மாற்றுவது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories