இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கடுகு எண்ணெயில் இந்த 2 பொருட்களை போட்டு ஹேர் பேக்காக பயன்படுத்துங்கள். வெள்ளை முடி பிரச்சனை முற்றிலுமாக நீங்கிவிடும்.
How Mustard Oil Helps To White Hair Turn into Black
வயது ஆக ஆக முடி நரைப்பது சகஜம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை என அனைவருக்கும் முடி நரைக்கிறது. முடி நரைப்பதால் பலரின் தன்னம்பிக்கை குறைகிறது. இதனால் அவர்கள் வெள்ளை முடிக்கு பார்லருக்கு சென்று வண்ணங்களை பூசி கொள்கிறார்கள். ஆனால் இது அவர்களது முடிக்கு சேதத்தை தான் ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், கடுகு எண்ணெயுடன் இரண்டு பொருட்களை கலந்து தலை முடிக்கு பயன்படுத்தினால் தலைமுடி கருப்பாக மாறும் மற்றும் பளபளப்பாகவும் இருக்கும். அது என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
24
நரைமுடிக்கு கடுகு எண்ணெய்:
உங்களது வெள்ளை முடியை கருப்பாக மாற்ற கடுகு எண்ணெயுடன் நெல்லிக்காய் பொடி மற்றும் மஞ்சள் கலந்து ஹேர் பேக்காக பயன்படுத்துங்கள். அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
34
வெள்ளை முடியை போக்க ஹேர் பேக்:
முதலில் ஒரு இரும்பு சட்டியை அடுப்பில் வைத்து அதில் மூன்று ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நிறம் மாறும் வரை சூடாகவும். பிறகு அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதனுடன் ரெண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து ஹேர் பேக்காக தயார் செய்யவும்.
இந்த ஹேர்பேக் போடும் முன் முதலில் தலை முடியை நன்கு சீவ வேண்டும். பிறகு தயாரித்த பேஸ்ட்டை ஒரு பிரஷ் உதவியுடன் உங்கள் தலைமுடியில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இந்த ஹேர்பேக் உங்களுடைய தலைமுடியை கருப்பாக மாற்றும். இதனால் இனி நீங்கள் பார்லருக்கு சென்று தலை முடிக்கு வண்ணம் பூச வேண்டிய அவசியம் இருக்காது மற்றும் பணமும் மிச்சமாகும். இந்த ஹேர் பேக்கை எந்த நேரத்திலும் உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.