"லிப்ஸ்டிக்" யூஸ் பண்றீங்களா ப்ளீஸ் நோட் பண்ணிக்கோங்க...இது அழகு மட்டுமல்ல, நோயும் கூட..!!

First Published | Sep 22, 2023, 3:53 PM IST

லிப்ஸ்டிக் தயாரிப்பில் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு அவை ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது தெரியுமா..? லிப்ஸ்டிக் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடு.
 

அழகாக இருக்க விரும்பாதவர்கள் யாருமில்லை..! சில பெண்கள் தங்களை கவர்ச்சியாக காட்டுவதற்காக கடைகளில் கிடைக்கும் அனைத்து வகையான பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். அவற்றில் ஒன்று தான் லிப்ஸ்டிக். ஆனால் லிப்ஸ்டிக் தயாரிப்பில் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு அவை ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது தெரியுமா..? லிப்ஸ்டிக் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடு.

பெண்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்க பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களில் ஒன்று லிப்ஸ்டிக். ஆனால் தேசிய பயோடெக்னாலஜி தகவல் இணையதளத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, லிப்ஸ்டிக்கில் கலர் செய்ய மாங்கனீஸ், ஈயம், காட்மியம் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அடங்கிய லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் உடலில் அலர்ஜி ஏற்படுகிறது.

Tap to resize

மற்றொரு ஆய்வின்படி, உதடுகளுக்குப் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்களில் பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்கள் அடங்கிய லிப்ஸ்டிக்கை உதடுகளில் தடவினால், வாய் வழியாக வயிற்றுக்குள் நுழைந்து வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

இதையும் படிங்க:  Homemade lip balm: உதட்டில் வெடிப்பு, வறட்சிக்கு...நிவாரணம் தரும் ஹோம்மேட் லிப் பாம்...! இனி கவலை வேண்டாம்..?

மேலும், லிப்ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஈயம் கர்ப்பத்திற்கு ஆபத்தானது. இது ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் அவளுடைய கருவுக்கும் தீங்கு விளைவிக்கும். லிப்ஸ்டிக் உதடுகள் வழியாக வயிற்றுக்குள் நுழைந்து இரத்தத்தில் ஈய அளவை அதிகரிக்கும்.

லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படும் பெட்ரோ கெமிக்கல்கள் நுண்ணறிவு, இனப்பெருக்க அமைப்பு மற்றும் உடல் வளர்ச்சியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

இதையும் படிங்க:  தினமும் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவரா நீங்கள்- ஜாக்கிரதையாக இருங்கள்..!!

எனவே லிஃப்டிக்கை நேரடியாக உதடுகளில் தடவாமல், அதற்கு முன் சிறிது தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவவும். அதன் பிறகு, லிஃப்டிக் பயன்படுத்தப்பட வேண்டும். தேங்காய் எண்ணெய் உதடுகளை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

Latest Videos

click me!