முடி உதிர்வதை தடுக்க..
இன்றைய வேகமான காலகட்டத்தில் முடி உதிர்தல் என்பது ஒரு பொதுவான பிரச்சனை. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. உதாரணமாக அதிகப்படியான வேலை அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுகள், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம், உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமை, மன அழுத்தம் போன்றவை இதில் அடங்கும். இவை முடியை மட்டுமல்ல நம்முடைய ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கின்றன.
முடி உதிர்தலால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் அவர்கள் கடையில் கிடைக்கும் பலவிதமான எண்ணெய்கள் மற்றும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றிற்கு பதிலாக உங்களது உணவு முறையில் சில மாற்றங்களை செய்தால் போதும். அதாவது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு விதமான ஊட்டச்சத்துக்களை உங்களது தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். முடி உதிர்தல் பிரச்சனை முற்றிலும் குறைந்து விடும்.