பெரியளவில் உடல் உழைப்பில்லாமல் இருப்பவர்கள், குளிக்கும் போது உடல் பாகங்களை நன்றாக சுத்தம் செய்து கழுவாதவர்கள் உள்ளிட்டோருக்கு எளிதில் மருக்கள் வந்துவிடும். உடலின் எந்த பகுதியிலும் மருக்கள் தோன்றும். ஒருசிலருக்கு முகத்தில் தோன்றி, அழகையே கெடுத்துவிடும். ஹெச்.பி.வி வைரஸின் தன்மையை பொறுத்து மருக்கள் தோன்றுவதிலும் பல்வேறு வகைகள் உண்டு. இதை போக்க மருத்துவ முறையில் பல்வேறு வழிகள் உண்டு. எனினும், வீட்டு மருத்துவ முறைகளில் மருக்களை ஒழிப்பதற்கான வழிமுறைகளை குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
செலஃபைன் டேப் கொண்டு நீக்கலாம்
உடலில் எந்த இடத்தில் மரு தோன்றியதோ, அந்த இடத்தில் டக்ட் டேப் அல்லது செலஃபைன் டேப்பை ஒட்டிவிட வேண்டும். தண்ணீர் எதுவும் உட்புகாத வண்ணம், அதை அப்படியே ஒட்டி வைக்க வேண்டும். குறைந்தது ஆறு நாட்களுக்கு அதை அப்படியே விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட நாட்களைக் கழித்து அதை நீங்கள் நீக்கிய பிறகு, அந்த இடத்தை தண்ணீர் கொண்டு குறைந்தது 20 நிமிடம் கழுவ வேண்டும். உங்களிடம் ஃப்யூமிஸ் ஸ்டோன் இருந்தால், அதன்மீது மெதுவாக தேய்க்கவும். மருக்கள் உடனடியாக உதிர்ந்துவிடும்.