பெரும்பாலானோர் காபியை விரும்பி குடிப்பார்கள். ஏன் சிலர் நாளின் தொடக்கத்தை கூட காபியில் இருந்து தான் ஆரம்பிக்கின்றனர். அழகு குறிப்புக்கு காபி பொடியை பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், காபி பொடியை நீங்கள் உங்கள் முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் கருத்து காணப்படும் உங்கள் சருமம் பளீச்சென்று மாறும். ஏனெனில், காபி பொடியில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. இது உங்கள் சருமத்திற்கு நல்ல பயனைத் தரும். மேலும் வெயில் கருத்த உங்கள் முகத்தை வெள்ளையாக மாற்ற காபி பொடி பெரும் உதவுகிறது. காபி பொடியை டான் ரிமோவல் என்று கூறலாம். எனவே காபி பொடியை ஃபேஸ் பேக்காக எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.