சியா விதைகள் முகத்தை ஜொலிக்க வைக்கும் தெரியுமா? இப்படி யூஸ் பண்ணுங்க

Published : Jun 13, 2025, 02:56 PM IST

பளபளப்பான முகத்தைப் பெற சியா விதைகளுடன் இந்த இரண்டு பொருட்கள் கலந்து ஃபேஸ் பேக்காக போடுங்கள்.

PREV
14
பளபளப்பான முகம் பெற..

அழகாக இருக்க யாருக்கு தான் பிடிக்காது? அதுவும் குறிப்பாக பெண்கள் அழகாக இருப்பதற்காக முகத்தில் விலையுயர்ந்த பலவிதமான கிரீம்கள், சீரம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இது தவிர பார்லருக்கு சென்று முகத்திற்கு பேஷியல் செய்து கொள்கிறார்கள் ஆனால் எந்தவித செலவும் இல்லாமல் வீட்டிலேயே பளபளப்பான முகத்தை பெறலாம். 

24
முகத்திற்கு சியா விதைகள்..

சியா விதைகளை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். பொதுவாக சியா விதைகள் எடையை குறைக்க தான் பயன்படுத்திருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த சியா விதைகள் நம் முக அழகையும் அதிகரிக்க உதவும் தெரியுமா? அதை பயன்படுத்துவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

34
சியா விதைகள் பேஸ் ஃபேக்

பளபளப்பான முகத்தை பெற சியா விதை ஃபேஸ் பேக் போடலாம். இதற்கு இரண்டு ஸ்பூன் சியா விதைகளை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலை தண்ணீரில் இருந்து விதைகளை மட்டும் பிரித்து மையாக அரைக்கவும். அதில் கற்றாழை ஜெல் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

44
குறிப்பு

இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போடலாம். ஆனால் இந்த பேஸ் ஃபேக் போடும் முன் நீங்கள் முதலில் பேஜெஸ்ட் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories