உங்கள் முகம் கண்ணாடி போல இருக்க இந்த பியூட்டி டிப்ஸ் பாலோ பண்ணுங்க...!!!

First Published | May 18, 2023, 10:05 PM IST

தக்காளியில் பலவித நன்மை மற்றும் ஆரோக்கியம் நிறைந்துள்ளது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கும் சிறந்து விளங்குகிறது.
 

தக்காளி ஃபேஸ் பேக் நன்மை:

தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற தக்காளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் தக்காளியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். முகப்பரு தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற தோல் பிரச்சனைகளை குறைக்க தக்காளி ஃபேஸ் பேக்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை குறைக்கவும், துளைகளை திறக்கவும் தக்காளி ஒரு சிறந்த மருந்தாகும்.

தக்காளியில் ஒரு சிறிய அளவு அமில பொருட்கள் உள்ளன. இவற்றில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் வைட்டமின் 'சி' உள்ளது. இது சருமத்திற்கு பொலிவை கொடுக்க உதவுகிறது. தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளன. அவை தோலை ஆழமாக சுத்தம் செய்கின்றன. அதனால்தான் தக்காளி நமது தோலின் pH அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. எனவே உங்கள் முகம் பார்ப்பதற்கு அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க ல் தக்காளியை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம். 

Tap to resize

தக்காளி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு:
தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி இவற்றை கலந்து ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முகம் அழகாகவும் பல பலப்பாகவும் மாறுவதை நீங்கள் காண்பீர்.

தக்காளி-சர்க்கரை:
தக்காளி மற்றும் சர்க்கரை பலரால் பயன்படுத்தப்படும் எளிதான ஸ்க்ரப் ஆகும். இதற்கு தக்காளியை இரண்டாக நறுக்கி சர்க்கரையில் தோய்த்து முகத்தை தேய்க்கவும். இது முகத்தை ஒளிரச் செய்யவும், முகத்தில் தேங்கியுள்ள அழுக்குகளை அகற்றவும் உதவுகிறது.

இதையும் படிங்க: உங்க கெட்ட பழக்கங்களை மாத்திக்கணுமா? இந்த 5 விஷயங்களை பண்ணா போதும்..!!

தக்காளி சாறு:
சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை குறைக்க, தக்காளியை வெட்டி அதிலிருந்து சாறு எடுக்கவும். அதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் சருமம் பளபளப்பாக மாறும்.

tomato face pack

தக்காளி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு:
தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி இவற்றை கலந்து ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தலாம். இதற்கு 2 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழுடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பேக் செய்யவும். பின்னர் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முகம் கண்ணாடி போல இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

Latest Videos

click me!