தலைமுடி கொட்டுதேனு ஃபீல் பண்ணாதீங்க... இதை ஃபாலோ பண்ணுங்க...

First Published May 2, 2023, 5:53 PM IST

பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தலைமுடி உதிர்வு. வெங்காய சாற்றைப் பயன்படுத்தி தலைமுடி உதிர்வை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இப்பதிவின் மூலம் காணலாம்...

முடி உதிர்வதைத் தடுக்கவும், நீண்ட கூந்தல் வளரவும், முடியை கருப்பாக்கவும் பலர் வெங்காய எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் வெங்காய எண்ணெய்க்குப் பதிலாக வெங்காயச் சாற்றை வைத்தால் முடி உதிராது என்கின்றனர் நிபுணர்கள். வெங்காயத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் முடி தொடர்பான பல பிரச்சனைகளை குணப்படுத்தும். இதனால் முடி உதிர்வு பிரச்சினை நீங்கி வேகமாக முடி வளரும்.
 

வெங்காயச் சாற்றை முடிக்கு எப்படி பயன்படுத்துவது?

வெங்காயத்தை முடிக்கு பல வழிகளில் பயன்படுத்தலாம். வெங்காயச் சாற்றை எடுத்து உங்கள் தலைமுடியில் நேரடியாக தடவினால் போதும். முடி உதிர்வதை நிறுத்த வெங்காய எண்ணெயை தலைமுடியில் தடவ வேண்டியதில்லை. வெங்காயச் சாறு மட்டும் சேர்த்தால் பலன் கிடைக்கும். வெங்காய சாறு முடி உதிர்வை நன்றாக குறைக்கும்.

வெங்காய சாற்றை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும்?

வெங்காயச் சாற்றை தொடர்ந்து 8 வாரங்கள் பயன்படுத்தி வந்தால் நல்ல
பலன் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வெங்காயச் சாற்றை வாரம் ஒருமுறையாவது தினமும் ஷாம்பு போடுவதற்கு முன் தடவினால் வித்தியாசம் தெரியும். 

வெங்காய சாற்றின் பயன்:

முடி நீளமாக வளரும்:

வெங்காயத்தில் முடிக்கு பல நன்மைகள் உள்ளன. முதலில் இந்த வெங்காய சாறு உங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் அடைபட்ட துளைகளை திறக்க உதவுகிறது. இது முடிக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதனால் உங்கள் முடி நீளமாக வளரும். 

இதையும் படிங்க: உஷார்: மறந்தும் கூட பாலுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க...விளைவு பயங்கரம்..!!

முடி உதிர்தல் மற்றும் பொடுகை குறைக்கும்:

வெங்காயச் சாறு முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லையைக் குறைக்க உதவுகிறது. வெங்காய சாறு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை பொடுகை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். இது உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இது முடிக்கு ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் வழங்குகிறது. இது முடி உதிர்வை குறைக்கிறது.

click me!