முகப்பரு பிரச்சனையில் இருந்து நிவாரணம்:
இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், உடல் தோலில் உள்ள முகப்பரு பிரச்சனையை நீக்கும். தேங்காய் நீரைக் குடித்து, சருமத்தை சுத்தம் செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள தூசித் துகள்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பிரச்சனை நீங்கும். தேங்காய் நீர் பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும். இந்த தேங்காய் நீரை தினமும் குடித்து வந்தால் உடலில் நீர் பற்றாக்குறை வராது.
இதை பயன்படுதும் முறை:
தேங்காய் நீரை முகத்தில் தடவுவதற்கு முன் இரண்டு டீஸ்பூன் தேங்காய் நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருக்கள் மீது தடவவும். இப்படி செய்வதால் முக தோலை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி மீண்டும் பருக்கள் வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது.