அதேபோன்று, முகத்தை ஜொலிக்க செய்ய ஒரு சிறிய பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரோஸ் வாட்டர் 2 டேபிள் ஸ்பூன், விட்டமின் E கேப்ஸ்யூல் 2, கஸ்தூரி மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், காபித்தூள் 1/4 ஸ்பூன், அலோவேரா ஜெல் 3 டேபிள் ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் ஒரு ஸ்பூனை வைத்து அடித்து கலக்கினால் சூப்பரான கோல்டன் கலர் ஜெல் நமக்கு கிடைத்திருக்கும். இதை தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் போட்டு கொண்டால் முகம் பொலிவு பெறும்.