நன்கொடை மட்டும் ரூ.8,29,734 கோடி.. உலகின் அதிக நன்கொடை செய்த நபர்.. அம்பானி, ஷிவ் நாடார் இல்ல..

First Published Mar 19, 2024, 10:31 AM IST

ஜாம்செட்ஜி டாடா கடந்த நூற்றாண்டின் அதிகம் நன்கொடை செய்த நபராக நீடிக்கிறார்.

ஜாம்செட்ஜி டாடா கடந்த நூற்றாண்டின் அதிகம் நன்கொடை செய்த நபராக நீடிக்கிறார். இதன் மூலம் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, அசிம் பிரேம்ஜி மற்றும் ஷிவ் நாடார் ஆகியோரை பின்னுக்கு தள்ளி அதிக நன்கொடை செய்த நபராக இருக்கிறார்., டாடா குழும நிறுவனர் எடெல்கிவ் அறக்கட்டளை (EdelGive Foundation) மற்றும் ஹுருன் அறிக்கை (Hurun Report 2021) 2021 இன் படி அவர் ரூ. 8,29,734 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

இரண்டாவது இடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் 74.6 பில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கியுள்ளனர். 

பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட் 37.4 பில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கி இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார், ஜார்ஜ் சோரோஸ் 34.8 பில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை செய்துள்ளார், ஜான் டி ராக்ஃபெல்லர் 26.8 பில்லியன் அமெரிக்கா டாலர் நன்கொடை செய்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். .

ஜாம்செட்ஜி டாடா கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு பெரும் நன்கொடைகளை வழங்கினார். 1892 ஆம் ஆண்டு அவர் தொண்டு பணிகளை தொடங்கினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 1904 ஆம் ஆண்டு அவர் மறைந்தாலும், டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தற்போது டாடா குழுமத்தின் தொண்டு பணிகளை கவனித்து வருகிறார்.

உலகெங்கிலும் உள்ள முதல் 50 நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் மேலு ஒரு இந்தியர் மட்டுமே பட்டியலில் இடம் பிடித்தார்: அவர் விப்ரோ நிறுவவர் அசிம் பிரேம்ஜி ஆவார். அவர் 22 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், உலகின் இரு பெரும் பணக்காரர்களான எலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இல்லை என்பது தான்..

click me!