படிப்பு முதல்... நடிப்பு வரை பட்ட கஷ்டம் கொஞ்சம் இல்ல! 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியாவின் சோகம்!

Published : Jan 30, 2024, 06:21 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியா கடந்து வந்த சோகம் நிறைந்த பாதை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

PREV
18
படிப்பு முதல்... நடிப்பு வரை பட்ட கஷ்டம் கொஞ்சம் இல்ல! 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியாவின் சோகம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய சீரியல்களில் ஒன்று 'சிறகடிக்க ஆசை'. டி ஆர் பி-யில் முதலிடத்தை பிடித்த பாக்கியலட்சுமி சீரியலையே பின்னுக்கு தள்ளி உள்ள இந்த சீரியல், தற்போது விஜய் டிவியின் டாப் 1 டிஆர்பி-யே கைப்பற்றி உள்ளது.

28

இந்த சீரியலில் மிகவும் சைலன்டான மற்றும் பொறுப்பான மருமகளாக இருக்கும் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. மதுரையில் பிறந்து வளர்ந்த இவர், ஏழ்மையான குடும்பத்தில் இருந்து தற்போது ஒரு நடிகையாக உயர்ந்துள்ளார்.

Dhanush D51 Shooting: தனுஷின் படப்பிடிப்பால்... கடுமையான போக்குவரத்து பாதிப்பு..! பொதுமக்கள் அவதி..!

38

இவருடைய அப்பா கூலி வேலை தான் செய்து வந்துள்ளார். கோமதி பிரியாவுக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கையும் உள்ளனர். குடும்பத்தின் மூத்த பெண் என்பதால் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற கூடுதல் பொறுப்பும் இவருக்கு இருந்தது. அதேசமயம் சிறுவயதில் இருந்தே நன்றாக படித்து வந்த கோமதி பிரியா, படித்து முடிப்பதற்க்கே பல கஷ்டத்தை கடந்துள்ளார். பல சமயங்களில் இவருக்கு அவருடைய ஆசிரியர்கள் தான் உதவி செய்து, இவரை படிக்க வைத்துள்ளனர்.

48

அதேபோல் நல்ல மதிப்பெண் எடுத்து, 12-ஆம் வகுப்பில் இவர் நிலையில்... BTech படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரியில் படிக்க மிகவும் எளிமையாக வாய்ப்பு கிடைத்து விட்டாலும், அதற்கான செலவுகளை செய்யும் அளவுக்கு இவருடைய குடும்ப சூழல் இல்லை. எனினும் இவருடைய மதிப்பெண்களை பார்த்து அந்த கல்லூரியின் சேர்மேன் இவரின் படிப்புக்கு உதவி செய்துள்ளார். மேலும் கல்லூரி படிக்கும் போதே, பார்ட் டைம் வேலை செய்து தன்னுடைய மற்ற செலவுகளையும் சமாளித்தார்.

பிக்பாஸுக்கு பின் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் முட்டி கொண்ட தினேஷ் - விசித்ரா! வெளியேறிய பிரபலம்!

58

குடும்பத்தை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்த கோமதி பிரியா, முடிந்த அளவுக்கு தம்பி மற்றும் தங்கைகளை வளர்ப்பதற்கும் உதவியுள்ளார். இவர் படித்து முடித்த கையேடு கேம்பஸ் இன்டர்வியூவில் சென்னை மற்றும் பெங்களூரில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது.

68

ஒரே மாதிரியான வேலை செய்வதில் ஆர்வம் இல்லாமல், ஆரம்பத்தில் மாடலிங் துறையில் கவனம் செலுத்த துவங்கிய கோமதி பிரியாவுக்கு பின்னர் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மாடலிங் துறையை விட்டுவிட்டு சீரியல்களில் வாய்ப்பு தேடி துவங்கினார். வாய்ப்பு தேடி சென்ற இடங்களில் எல்லாம் பல காரணங்கள் கூறி இவரை நிராகரித்தனர். ஆனால் விட முயற்சியோடு இவர் வாய்ப்பு தேடினார். அந்த சமயத்தில் தான் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 'வர்மா' படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கோமதிப்பிரியா நடித்தார்.

Hansika Workout Photos: உடலை வில்லாக வளைத்து.. தலைகீழாக தொங்கியபடி ஒர்க் அவுட் செய்து மிரள வைக்கும் ஹன்சிகா!

78

இதை தொடர்ந்து, கலர்ஸ் தொலைக்காட்சியில் 'ஓவியா' என்கிற சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார். அதன் பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வேலைக்காரன்' சீரியலில்  ஹீரோயினாக நடித்த கோமதி பிரியா, இதைத்தொடர்ந்து தற்போது 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடித்து வருகிறார்.

88

மிகவும் எதார்த்தமான நடிப்பாலும், பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்கும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் கோமதி பிரியா...  தமிழை தாண்டி தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

குடியால் மானமும் போச்சு.. பட வாய்ப்பும் போச்சு! 30 வயதில்.. திருமணத்தை பனையமாக வைத்து ஸ்ரீதிவ்யா எடுத்த சபதம்?

Read more Photos on
click me!

Recommended Stories