Comedy Actress Sumathi:
தமிழில் சுமார் 50திற்கும் மேற்பட்ட படங்களில், காமெடி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை சுமதி முதல் முறையாக, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Vadivelu Give the Movie Chance:
வடிவேலுவுடன் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட நடித்துள்ள இவர், சமீப காலமாக வடிவேலுவின் மேலாளர், வடிவேலுவை பார்த்து வாய்ப்பு கேட்பதற்கு கூட விடுவதில்லை.அவர் பிசியாக இருக்கிறார் என விரட்டி விடுவதாகவும், ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு தன்னை பார்த்தால் நன்றாக பேசுவார் என இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Husband Torcher:
ஒரு கட்டத்தில், கணவர் யாருடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறினாரோ... அவரிடம் சென்று, என்னை கண்காணாத இடத்திற்கு கூட்டிட்டு போய்விடு, என சுமதி கண்ணீர் விட, அவரும்... சுமதி மற்றும் அவரின் மூன்று பிள்ளைகளுடன் சென்னைக்கு வந்துள்ளார். அங்கு வீடு இருந்து இரண்டாவது கணவருடன் தன்னுடைய வாழ்க்கையை சுமதி துவங்கினார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மூலம் சினிமாவில் துணைநடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தததால், பின்னர் முழுமையாக திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார்.
Yogi babu and soori Help:
இவரின் பிள்ளைகள் இளம் வயதை அடைந்த பின்னர், சுமதியை விட்டு பிரிந்து சொந்த ஊருக்கு சென்றது மற்றும் இன்றி, பெத்த தாய் என்று நினைத்து ஒரு போன் கூட செய்து என்னை விசாரிக்க மாட்டார்கள். நான் ஏதாவது சம்பாதித்து கொடுத்தால் மட்டும் வாங்கி கொள்வார்கள் என எமோஷனலாக பேசியுள்ளார். மேலும் தன்னுடைய இரண்டாவது கணவர் தான் என்னை இப்போது வரை நன்றாக பார்த்து கொள்வதாகவும் கூறியுள்ளார். சமீப காலமாக பட வாய்ப்புகள் தனக்கு அதிகம் கிடைப்பதில்லை என்று கூறியுள்ள சுமதி, கொரோனா காலத்தில் யோகி பாபு, சூரி, நடிகர் நரேன் ஆகியோர் தனக்கு பணம் கொடுத்து உதவியதாகவும், அதே போல் யோகி பாபு எப்போதுமே என்னை பார்த்தல் பணம் கொடுத்து உதவுவார் என கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் இவங்க ரெண்டுபேரும் லவ்வர்ஸா? இது தெரியாம போச்சே.. வைரலாகும் போட்டோஸ்!