ஒரே நாளில் பேமஸ் ஆவது என்பது மிகவும் அரிதான ஒன்று. அப்படி ஒரே நாளில் பேமஸ் ஆகி இன்று இந்திய சினிமாவையே தன்னுடைய இசையால் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் தான் அனிருத். இவர் கடந்த 2011-ம் ஆண்டு 3 படத்துக்காக இசையமைத்த ஒய் திஸ் கொலவெறி என்கிற பாடல் மூலம் ஓவர் நைட்டில் உலகளவில் பேமஸ் ஆனார். யூடியூப்பில் செம்ம வைரல் ஆனதால் கொலவெறி பாய் என உலகளவில் கொண்டாடப்பட்டார் அனிருத்.
24
sai abhyankkar with harrish jayaraj
அப்படி அனிருத்தை போல் தற்போது ஒரே பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகி இருப்பவர் தான் சாய் அபயங்கர். இவர் கட்சி சேரா என்கிற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்து அப்பாடலை தன்னுடைய சொந்தக் குரலில் பாடியும் இருந்தார். இப்பாடலுக்கு சாய் அபயங்கர் உடன் சேர்ந்து சம்யுக்தா என்கிற மாடல் அழகி ஆட்டம் போட்டு இருந்தார். இப்பாடல் தான் தற்போது இன்ஸ்டா ரீல்ஸ்களில் செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது.
இந்த பாடல் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் அந்த பாடலில் சாயும், சம்யுக்தாவும் ஆடும் நடனம் தான். அந்த நடனத்தால் தான் இப்பாடல் வேறலெவலில் வைரல் ஆனது. இப்பாடல் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அதற்குள் யூடியூப்பில் 2.2 கோடிக்கு மேல் பார்வைகளை குவித்துள்ளது. இந்த வைரல் பாடலுக்கு சொந்தக்காரரான சாய் அபயங்கர் பற்றிய ஒரு ஆச்சர்ய தகவல் தான் தற்போது தெரியவந்துள்ளது.
44
Singers Tippu Harini son sai abhyankkar
சாய் அபயங்கர் இசை குடும்பத்தை சேர்ந்தவர் தானாம். இவரது பெற்றோர் வேறு யாருமில்லை பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி ஜோடியின் மகன் தான் இந்த சாய் அபயங்கர். இவரது பெற்றோர் தமிழில் ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள நிலையில், தந்தை மற்றும் தாயின் வழியில் தற்போது மகனும் தன்னுடைய மந்திரக் குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.