சின்னத்திரை சீரியல்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல்வேறு தொலைக்காட்சிகள் புத்தம் புது சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்பிய வண்ணம் உள்ளன. டிஆர்பி-யில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீ தமிழ் சீரியல் ஒன்று டாப் 10 டிஆர்பி ரேஸில் இணைந்திருக்கிறது. அது என்ன சீரியல் என்பதையும் இந்த வார டாப் 10 டிஆர்பி பட்டியலையும் தற்போது பார்க்கலாம்.