ட்ரெடிஷனல் லுக்.. குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாட்டம் - Celebration போட்டோஸ் வெளியிட்ட விஜய் தேவரகொண்டா!

First Published Jan 15, 2024, 4:56 PM IST

Vijay Deverakonda : பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தாருடன் இணைந்து தனது வீட்டில் சங்கராந்தி விழாவை கொண்டாடியுள்ளார்.

Vijay deverakonda

திரையுலகில் தான் கதையின் நாயகனாக களமிறங்கிய மிக குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை ஈர்த்துள்ள ஒரு நடிகர் தான் விஜய் தேவரகொண்டா. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் இவர் திரையுலகில் அறிமுகமானார். இந்த 12 ஆண்டு கால பயணத்தில் அவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

அந்த மாதிரி காட்சிகள் நடிக்கும்போது... முத்தக்காட்சி & படுக்கையறை சீன்ஸ் குறித்து மனம் திறந்த நடிகை அஞ்சலி!

Actor Vijay deverakonda

தமிழில் இதுவரை ஒரே ஒரு திரைப்படத்தில் தான் இவர் நடித்திருக்கிறார் என்று பொழுதும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு தொடர்ச்சியாக இருந்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "நோட்டா" என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தானாவிற்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருவது அனைவரும் அறிந்ததே.

Vijay deverakonda Pongal

இந்நிலையில் தமிழர்கள் பொங்கல் திருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வரும் இந்த நேரத்தில் விஜய் தேவாரகொண்டாவும் தனது குடும்பத்தாருடன் இணைந்து "சங்கராந்தி" கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார். விஜய் தேவர் கொண்டாவின் தந்தை தேவாரகொண்டா கோவர்தன் ராவ், தாய் தேவரகொண்டா மாதவி மற்றும் தம்பி ஆனந்த் தேவரகொண்டா ஆகியோரோடு இணைந்து அவர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார். 

நியூமராலஜி பார்த்து பெயரை மாற்றினாரா Prabhass? The Raja Saab போஸ்டர் பிரச்சனை - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

click me!