அதன்படி கமல், ரஜினி கதாபாத்திரங்களில் அவர்களே நடிப்பார்கள் என தெரிகிறது. அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதுதவிர மணிரத்னம் கேரக்டரில் நடிகர் மாதவனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இளையராஜாவுடன் நண்பனாக அறிமுகமாகி, ஆறே ஆண்டுகளில் சண்டை போட்டு பிரிந்த பாடலாசியர் வைரமுத்துவின் கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார் என்பதை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமாக இருந்தனர்.