மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பபட்ட சமந்தா.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

Published : Oct 13, 2023, 09:07 AM IST

'குஷி' படத்தில் நடித்து முடித்த பின்னர், முழுமையாக ஓய்வில் இருந்து வரும் சமந்தா தற்போது மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.  

PREV
16
மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பபட்ட சமந்தா.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!
Samantha Take Short Break in Cinema:

தென்னிந்திய திரையுலகில் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் தேடப்படும் நடிகைகள் லிஸ்டில் உள்ள சமந்தா, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த 'குஷி' படத்திற்கு பின்னர், ஒரு வருடம் திரையுலகில் இருந்து தற்காலிகமாக விலக முடிவு செய்தார். குறிப்பாக மயோசிட்டிஸ் பிரச்சனை  சரியாகும் வரை எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளப்போவதில்லை என்று வெடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 

26
Samantha Take Treatment in News land:

இதற்கிடையில், சிகிச்சைக்காக சமீபத்தில் சமந்தா தனது அம்மாவுடன் நியூயார்க் சென்றார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று திரும்பினார். அதுமட்டும் இன்றி, தன்னை ரிலாக்ஸ் செய்யும் விதத்தில், ஆஸ்திரேலிய, பாலி, போன்ற பல இடங்களுக்கு சுற்றுலா சென்றார்.

Ponni: விஜய் டிவியின் 'பொன்னி' சீரியலில் இருந்து... திடீர் என விலகிய நடிகை! இனி அவருக்கு பதில் இவர்தான்!
 

36
Samantha Hope Meditations:

அதே போல் சமீபகாலமாக ஆன்மீக தலங்களுக்கு சென்று யோகா, பூஜை செய்து வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். சமந்தா உடல்நிலையை மேம்படுத்த இவை மிகப்பெரிய அளவில் கைகொடுப்பதாகவும் அவர் நம்புகிறார்.
 

46
Samantha Hospitalized:

இந்நிலையில் சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் புகைப்படத்தை அவரே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து,  என்ன காரணத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்பதையும் தெரிவித்துள்ளார்.


CWC Pugazh Baby Name: அட குக் வித் கோமாளி புகழ்.. தன்னுடைய மகளுக்கு வைத்த கியூட்டான பெயர்! என்ன தெரியுமா?

56
What Reason:

சமந்தா தன்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். இந்த சிகிச்சை மூலம் , இரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிப்பு, தசை வலிமை, வைரஸ்களை எதிர்த்துப் போராடும் திறன், எலும்புகளுக்கு வலிமை போன்ற பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

66
Samantha Affected Skin Problems For Myositis Treatment:

எனவே சமந்தா முழு ஆற்றலுடன் விரைவில் குணமடைந்து மீண்டு வரவேண்டும் என ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் . மயோசிட்டிஸ் சிகிச்சைக்காக சமந்தா தொடர்ந்து அதிக டோஸ் ஸ்டிராய்டு எடுத்து கொண்டதால், அவரின் தோளில் தன்மை மாறிவிட்டதாக சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Read more Photos on
click me!

Recommended Stories