Rama Navami 2024 : இன்று ராம நவமி.. விரத முறைகள் பலன்கள்!!

First Published Apr 17, 2024, 11:49 AM IST

இன்று ராம நவமி. இந்நாளில் விரதம் இருந்தால் பலவிதமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ராமநவமி என்பது ராமர் அவதரித்த தினம் ஆகும். இந்து மதத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நாட்களில் ராமநவமியும் ஒன்றாகும். இந்த விழா சித்திரை மாதத்தில் கொண்டாப்படும். பங்குனி மாதத்திலும் வரும். அதன்படி இந்த ஆண்டு ராமநவமி ஏப்ரல் 17ஆம் தேதி புதன்கிழமை அதாவது இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் விரதம் இருந்து, ராமரை குறித்த பாடல்களை கேட்பதும் படிப்பதும் நன்மை தரும் அது மட்டுமின்றி, ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை 108 முறை சொன்னால் அல்லது எழுதினால் ராமரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். 

அதுபோல இந்தாண்டு ராமநவமி அன்று ரவி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தில் சூரியனின் தாக்கம் இருப்பதால், நோய்கள், தோஷங்கள், துன்பங்கள் நீங்க மனதார வழிபட வேண்டும்.

ராமரை வழிபடுவதற்கான உகந்த நேரம்: இன்று ராம நவமி என்பதால்,  ராமரை வழிபடுவதற்கான உகந்த நேரம் காலை 10:30 மணி முதல் மதியம் 11 மணி வரை ஆகும்.

தானம் தர்மம்: இன்றைய தினத்தில் பிறருக்கு தான தர்மங்களை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம் நீர், மோர் வடை, பருப்பு போன்றவற்றை தானமாக கொடுக்கலாம்.

பலன்கள்: திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் நோய்கள், வறுமை நீங்கும். நாடிய பொருட்கள் கிடைக்கும். லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

click me!