ரஜினியை அடக்கி ஆளும் கெட்டப்பில் அமிதாப்! 33 வருடங்களுக்கு பின் இணைந்து நடிக்கும் நண்பர்கள் வைரல் போட்டோ!

ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் ஒன்றாக நடிக்கும் போது இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வரும் நிலையில், அமிதாப்பச்சனுடன் ரஜினிகாந்த் சேர்ந்து நடிக்கும் போது எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Thalaivar 170

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் கெத்து காட்டியது. சுமார் 600 கோடிக்கு மேல் 'ஜெயிலர்' வசூல் செய்த தகவலை சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்தது மட்டும் இன்றி, இப்படத்தின் இயக்குனர் நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய மூவருக்கும் கார், பணம் என பரிசை அள்ளிக்கொடுத்தது.

அடுத்தடுத்த மரணத்தால்... 3 முறை தற்கொலைக்கு முயன்ற நடிகை கவிதா! ஒவ்வொரு நாளும் கண்ணீர் விட்டு கதறும் பிரபலம்!
 


'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த், இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாரும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு ஆரமாக மும்பையில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும்... தலைவருடன் இணைந்து நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனை அதிகார பூர்வமாக லைக்கா நிறுவனம் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் ஃபார்மல் ஷர்ட் மற்றும் பேன்ட் அணிந்து கொண்டு, கோட் சூட்டில் அமர்ந்திருக்கும் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து போனை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார். இதை வைத்து பார்க்கையில் அமிதாப் பச்சன் ரஜினிகாந்தின் உயர் அதிகாரியாக நடிப்பது தெரிகிறது.

Sneha: மஞ்ச காட்டு மைனாவாக மாறிய சினேகா..! சேலையை காற்றில் பறக்கவிட்டு உருகி உருகி ரசிக்க வைத்த போட்டோ ஷூட்!
 

மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த், காவல் துறை அதிகாரியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. அதே போல் இந்த படத்தின் மூலம், ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன் இருவரும் சுமார் 33 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!