10 போட்டிகளுக்கு பிறகு மிட்செல் சாண்ட்னருக்கு வாய்ப்பு கொடுத்த சிஎஸ்கே - டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்!

First Published May 5, 2024, 3:42 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 53ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

தரம்சாலாவில் நடைபெறும் 53ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்துள்ளார். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முஷ்தாபிஜூர் ரஹ்மானுக்கு பதிலாக மிட்செல் சாண்ட்னர் அணியில் இடம் பெற்றுள்ளார்.

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

பஞ்சாப் கிங்ஸ்:

ஜானி பேர்ஸ்டோவ், ரிலீ ரோஸோவ், ஷஷாங்க் சிங், சாம் கரண் (கேப்டன்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அஷுதோஷ் சர்மா, ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், கஜிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்கூர், ரிச்சர்டு கிளீசன், துஷார் தேஷ்பாண்டே.

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 29 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் 13 போட்டியிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 15 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. தரம்சாலாவில் நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக தரம்சாலாவில் நடைபெற்ற 11 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ளது.

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளில் சிஎஸ்கே 5 போட்டியில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 10 போட்டிகளில் 4ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.

PBKS vs CSK, 53rd IPL 2024

சாதிக்க காத்திருக்கும் வீரர்கள்:

இந்தப் போட்டியில் ஷிவம் துபே ஒரு சிக்ஸர் அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனை படைப்பார்.

எம்.எஸ்.தோனி 2 சிக்சர் அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 250 சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

சாம் கரண் 6 சிக்ஸர்கள் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 150 சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனை படைப்பார்.

ஜித்தேஷ் சர்மா 69 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

click me!