என்னங்க சொல்லுறீங்க! கர்ப்பிணிகள் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாதா..?! ஏன் அப்படி..?

First Published Mar 19, 2024, 11:13 AM IST

கத்தரிக்காயில் பலவிதமான சத்துக்கள் இருப்பது உண்மைதான். ஆனால் ஆயுர்வேதத்தின்படி, கர்ப்பிணிகள் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. 

உணவு நமக்கு ஊட்டச்சத்தை அளித்து உடல் ஆரோக்கியமாக செயல்பட பெரிதும் உதவுகிறது என்பது எவ்வளவு உண்மையோ, சில உணவுகள் விஷமாக இருக்கும் என்பதும் கூட உண்மை தான். ஆம்..எனவே, நாம் உணவைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக கர்ப்பிணிகள் உணவை எடைபோட்டு தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில், கர்ப்பத்திற்கு முன் விரும்பி சாப்பிடும் சில உணவுகள் அல்லது அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகள் கூட கர்ப்ப காலத்தில் நச்சுத்தன்மையுடையதாக மாற வாய்ப்புகள் அதிகம். அத்தகைய உணவில் சில காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் ஆகியவை அடங்கும். 

அந்தவகையில், இக்கட்டுரையில் கர்ப்பிணிப் பெண்கள் புறக்கணிக்க வேண்டிய ஒரு காய்கறியைப் பற்றி தான் சொல்லப் போகிறோம். அது தான் கத்தரிக்காய். ஆம்...கத்தரிக்காயில் பலவிதமான சத்துக்கள் இருப்பது உண்மைதான்...ஆனால் ஆயுர்வேதத்தின்படி, கர்ப்பிணிகள் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. ஏனெனில், அது அவர்களது உடலுக்கு மோசமான தீங்கை விளைவிக்குமாம். மேலும் இதுகுறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?
கர்ப்பிணிகள் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது என்று ஆயுர்வேதம் கூறுவது உண்மைதான். காரணம்,  இது மாதவிடாய் முன் அறிகுறிகள் மற்றும் அமினோரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பைத்தோர்மோன்களைக் கொண்டுள்ளது. மேலும் இது சிறுநீர்ப் பெருக்கியாகவும் செயல்படுகிறது. எனவே, கருத்தரிக்க விரும்பும் பெண்கள் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சுழற்சி தூண்டப்படும். இந்தக் காரணங்களால் தான் கர்ப்பிணிப் பெண்களுக்கு கத்தரிக்காய் நல்லதல்ல என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

முன்கூட்டிய பிரசவம்: கத்தரிக்காய் மண்ணில் உள்ள டாக்ஸோபிளாஸ்மாசிஸை உறிஞ்சுகிறது. எனவே, இதை கர்ப்பிணிகள் உட்கொண்டால், முன்கூட்டிய பிரசவ அபாயத்தை சந்திக்க நேரிடுமாம்.

இதையும் படிங்க: கர்ப்பிணிகளே! சர்க்கரை நோய் இருந்தால் ஜாக்கிரதை...குழந்தைக்கு 'இந்த' ஆபத்தான பாதிப்புகள் வரும்!

ஒவ்வாமை: கத்தரிக்காய் பொதுவாக அதிக ஒவ்வாமை காரணிகளைக் கொண்டுள்ளது. எனவே, இதை சாப்பிட்டால் இது உடலில் விரைவில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை சாப்பிட்டால் இது கை, கால் மற்றும் வயிற்றில் அரிப்புகளை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: கர்ப்பிணிகளே.. குழந்தையின் எலும்புகள் வலுவாக இருக்க இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க!!

கத்தரிக்காயில் பல வகையான சத்துக்கள் உள்ளது என்பது பொய்யல்ல. ஆனால், கர்ப்பிணிகள் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுவதை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். குறிப்பாக வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக கத்தரிக்காயை தவிர்த்து வந்தால் மிகவும் நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!