லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஒரு பக்கம் தான் நடிக்கும் படங்களில் படு பிசியாக இருந்தாலும்... தன்னுடைய குடும்பம், குழந்தை, உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு நேரம் ஒதுக்க மறக்காதவர்.
27
குறிப்பாக தான் நடக்கும் படங்களின் பட விழாக்களில் கலந்து கொள்ளமாட்டேன் என அக்ரீமெண்ட் போட்டு கையெழுத்து வாங்கி கொண்டாலும், குடும்ப நண்பர்களின் விசேஷம் என்றால் ஆப்சென்ட் ஆகாமல் அட்டென்ட் ஆகி விடுவார்.
அந்த வகையில் நயன் - விக்கி இருவருக்கும் நெருக்கமான நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை கட்டி பிடித்து வாழ்த்து தெரிவித்தது மட்டும் இன்றி, விலை உயர்ந்த பரிசையும் கொடுத்து அசத்தியுள்ளார்.
47
இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது நயன்தாரா - விக்கியை தவிர கௌரி கிஷன் போன்ற பிரபலங்களும் இவரின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
நயன்தாரா மிகவும்... எளிமையான நீல நிற சேலையில் காதில் பெரிய ஜிமிக்கி அணிந்து எளிமையான மேக்கப்பில் உள்ளார். விக்னேஷ் சிவன் பேபி பிங்க் நிற ஷர்ட் அணிந்துள்ளார்.
67
முன்னணி பிரபலங்களின் விசேஷங்களில் கூட, கலந்து கொள்ள யோசிக்கும் நயன்... நட்பு என வந்தால், இப்படி தான் மிகவும் ஜாலியாக இருப்பர் போல என்று, இவரின் புகைப்படங்களுக்கு கமெண்ட் குவிந்து வருகிறது.
நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 5-திற்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி உள்ளது. டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடென்ட், தனி ஒருவன் 2, குட் பேட் அக்லி, டாக்சிக், ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.