- Home
- Gallery
- Ramya Pandian: தகதகவென மின்னும் பட்டு சேலையில்... தங்க சிலை போல் இருக்கும் ரம்யா பாண்டியன்!
Ramya Pandian: தகதகவென மின்னும் பட்டு சேலையில்... தங்க சிலை போல் இருக்கும் ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியன் சும்மா தங்க சிலை போல், பட்டு சேலையில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

நடிகை ரம்யா பாண்டியன் வெள்ளித்திரை நடிகையாக இருந்தாலும், இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய வைத்தது சின்னத்திரை தான். சரியான பட வாய்ப்புகள் அமையாமல் இருந்த இவர்...திடீர் என விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையால் பலரை ஆச்சர்யப்படுத்தினார்.
இதை தொடர்ந்து, காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்த ரம்யா... அதிரடியாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்தார். தன்னுடைய ஸ்மார்ட்டான விளையாட்டால்... ஓரிரு வாரத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்த ரம்யா, 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து 2-ஆவது ரன்னர்ரப்பாக வெளியேறினார்.
ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படும் நடிகையாக இவர் இருந்தாலுமே கூட, ஏனோ தன்னுடைய திறமைக்கு ஏற்ற பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி வருகிறார். அடிக்கடி பட வாய்ப்புகளுக்கு கொக்கி போடும் விதமாக, ரகரகமான மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், தங்க சிலை போல்.. தகதகவென இருக்கும் பட்டு சேலை அணிந்து இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் ஒட்டு மொத்த, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அழகே பொறாமை கொள்ளும் அழகில், ஒரு தேவதை போல, ரம்யா பாண்டியன் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.