ரஜினிகாந்த் மற்றும் நெல்சனுக்கு மட்டும் பணம், கார், என கொடுத்து அசத்திய கலாநிதிமாறன்... இந்த படத்தின் வெற்றிக்கு தன்னுடைய இசையால் வலு சேர்த்த, இசையமைப்பாளர் அனிருத்துக்கு அல்வா கொடுத்து விட்டதாக நெட்டிசன்கள் சிலர் சமூக வலைத்தளத்தில் விமர்சிக்க துவங்கினர். இப்படி வெளியான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கப்பு சிப்புனு குறிப்பிட்ட தொகை காண செக்கை அனிருத்துக்கு வழங்கியுள்ளார் கலாநிதி மாறன். இது குறித்த புகைப்படங்கள் சன் பிச்சர்ஸ் சமூக வலைத்தளத்திலும் வெளியாகி வைரலாகி வருகிறது.