Trigrahi Raja Yogam : 50 வருடங்களுக்கு பிறகு அற்புதமான யோகம்; பண மழையில் நனையும் 3 அதிஷ்ட ராசிகள்!

First Published Apr 16, 2024, 10:12 AM IST

கிரகங்கள் தொடர்ந்து அந்தந்த ராசிகளுக்குள் மற்றும் வெளியேயும் செல்கிறது. இந்நிலையில், 3 கிரகங்களால் திரிகிரஹி ராஜயோகம் உருவாகி உள்ளது. அந்த அதிஷ்ட ராசிகள் யார் என்று பார்க்கலாம் வாங்க..

ஜோதிடம் படி, தற்போது புதன் மீன ராசியில் நுழைந்துள்ளார். இந்நிலையில், சுக்கிரனும் சூரியனும் ஏற்கனவே மீனத்தில் தான் உள்ளனர். தற்போது இம்மூன்றும் ஒன்றாக இருப்பதால் 'திரிகிரஹி ராஜயோகம்' உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில்  நல்ல மாற்றங்கள் வரப் போகிறது. அந்த அதிஷ்ட ராசிகள் யார் என்று பார்க்கலாம் வாங்க..
 

மிதுனம்: திரிகிரஹி ராஜயோகத்தால், இந்த ராசிக்கு மிக முக்கியமான நிகழ்வு ஒன்று நடக்கும். இவர்கள் வியாபாரத்தில் பெரும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி நிலைமை கடந்த காலத்தை விட அதிகமாகும். வியாபாரம் தொடங்க நல்ல நேரம். இந்த யோகத்தால், இவர்கள் ஆச்சரியமான நன்மைகளைப் பெறுவார்கள்.

கும்பம்: திரிகிரஹி ராஜயோகத்தால், இந்த ராசிக்கு நல்ல நாட்கள் ஆரம்பமாக போகிறது. இவர்களுக்கு திடீரென்று நிறைய பணம் வரவு வரும். வேலைக்காக காத்திருப்போருக்கு நல்ல செய்தி கிடைக்கும். சொல்லபோனால் அவர்கள் எதிர்பாராத அளவுக்கு பல நன்மைகளை பெறுவார்கள்.

மீனம்: திரிகிரஹி ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் பெரும் முன்னேற்றத்தை காண்பார்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சி பெருகும். உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

click me!