சம்பளத்தை 10 மடங்கு உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்.. அடுத்த படத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

Published : Apr 11, 2024, 12:04 PM ISTUpdated : Apr 11, 2024, 06:34 PM IST

லவ்டுடே படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
18
சம்பளத்தை 10 மடங்கு உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்.. அடுத்த படத்தின் சம்பளம் இத்தனை கோடியா?
Actor Soori

நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் தமிழ் திரையுலகில் முக்கியமான நபராக உருவெடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பி வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

28

இதை தொடர்ந்து லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பிரதீப் இயக்கி நடித்திருந்த லவ் டுடே படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்து வருகிறார்.

38
Pradeep Ranganathan

லவ் டுடே படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் அதிகம் தேடப்படும் திறமைசாலிகளில் ஒருவராக மாறியுள்ளார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

48

அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் பிரதீப் ரங்கநாதன் தெலுங்கு படத்தை இயக்க இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

58

இந்த படத்திற்கு அவர் ரூ.10 கோடி சம்பளம் பேசுவதாகவும், தயாரிப்பு நிறுவனமும் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. லவ் டுடே படத்திற்கு ரூ.1.50 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் பிரதீப் ரங்கநாதன் தான் இயக்க உள்ள அடுத்த படத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் தனது சம்பளத்தை கிட்டத்தட்ட 10 மடங்கு உயர்த்தி உள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

68
Pradeep Ranganathan

இந்த பெயரிடப்படாத தெலுங்கு படத்திற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

78

இதற்கிடையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு LIC (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது., ஆனால் பட்ஜெட் கட்டுப்பாடுகள் காரணமாக, ராஜ்கமல் நிறுவனம் படத்திலிருந்து விலகியது.

 

88

மாஸ்டர், லியோ படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது. பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா மற்றும் கிருத்தி ஷெட்டி, யோகி பாபு, கௌரி ஜி கிஷன், ஷா ரா மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories