சூப்பர்ஸ்டாரின் சிங்கப்பெண்... ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Published : Feb 06, 2024, 10:19 AM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், லால் சலாம் படத்தின் இயக்குனருமான ஐஸ்வர்யாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

PREV
16
சூப்பர்ஸ்டாரின் சிங்கப்பெண்... ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Rajinikanth Daughter Aishwarya

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இதில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் முடிந்தது. நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யாவுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பின்னர் ஐஸ்வர்யாவின் இயக்குனர் கனவு நனவானது.

26
aishwarya rajinikanth

அவர் தமிழில் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் 3. இதில் அவரது கணவர் தனுஷ் தான் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது கோலிவுட்டின் சென்சேஷனல் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் அறிமுகமானதும் ஐஸ்வர்யாவின் 3 படம் மூலம் தான். இப்படத்திற்காக அனிருத் இசையமைத்த முதல் பாடலான ஒய் திஸ் கொலவெறி ஒரே நாளில் உலகளவில் ரீச் ஆகி வைரல் ஹிட் ஆனது. 3 படம் ரிலீஸ் ஆனபோது கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் காதலர்கள் மத்தியில் இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

36
aishwarya rajinikanth Sons

இதையடுத்து வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார். கூடுதல் சிறப்பாக இதில் நடிகர் தனுஷும் கொக்கி குமாராக கெஸ்ட் ரோலில் வந்து அசத்தினார். இருப்பினும் இப்படத்திற்கும் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் சினிமாவுக்கு பிரேக் விட்ட ஐஸ்வர்யா பிட்னஸில் கவனம் செலுத்தினார். தனுஷுடன் 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஐஸ்வர்யா கடந்த 2021-ம் ஆண்டு தாங்கள் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா என்னுடைய 2-வது தாய்... தன்னுடைய சிங்கப்பெண்கள் பற்றி பேசி கண்கலங்கிய ரஜினிகாந்த்

46
aishwarya rajinikanth salary

அதன் பின் குடும்பத்தினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டாலும், பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனுஷ் உடனான பிரிவுக்கு பின் மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா, லால் சலாம் என்கிற திரைப்படத்தை தற்போது இயக்கி உள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 9-ந் தேதி திரைக்கு வருகிறது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

56
aishwarya rajinikanth Net worth

லால் சலாம் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் பிசியாக நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து விவரம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யாவுக்கு சொந்தமாக சென்னையில் சொகுசு வீடு ஒன்றும் உள்ளது. இதுதவிர கோடிக்கணக்கில் தங்க, வைர நகைகளையும் வாங்கி குவித்து வைத்திருக்கிறாராம் ஐஸ்வர்யா.

66
lal Salaam director aishwarya rajinikanth

சினிமா மட்டுமின்றி பிரபல நிறுவனங்களில் ஷேர் ஹோல்டராகவும் இருக்கிறாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன்மூலம் அவருக்கு கோடி கோடியாய் வருமானம் கிடைக்கிறதாம். இதுதவிர பல கோடி மதிப்பிலான சொகுசு கார்களும் ஐஸ்வர்யாவிடம் உள்ளதாம். வளர்த்து வரும் இயக்குனரான ஐஸ்வர்யா, ஒருபடத்துக்கு சுமார் ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இயக்குனராக மட்டுமின்றி பாடகியாகவும் தன் திறமையை நிரூபித்துள்ள ஐஸ்வர்யா விசில், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... "அப்பாவை சங்கி என்று சொல்லும்போது கோவம் வரும்".. லால் சலாம் ஆடியோ லாஞ்சு - உணர்ச்சிவசமாக பேசிய ஐஸ்வர்யா!

Read more Photos on
click me!

Recommended Stories