Vikram: பட ரிலீஸிற்கு முன்பே பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பிய 'விக்ரம்'..அதுவும் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

Anija Kannan   | Asianet News
Published : May 30, 2022, 12:09 PM ISTUpdated : May 30, 2022, 12:10 PM IST

Kamal Haasan Box Office collection: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், வரும் ஜூன் 3 ம் தேதி வெளியாகும் விக்ரம் படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 200 கோடி வரை வசூலித்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

PREV
15
Vikram: பட ரிலீஸிற்கு முன்பே பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பிய 'விக்ரம்'..அதுவும் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
vikram

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். பன்முக திறன் கொண்ட இவர் தற்போது அரசியல் மற்றும் சினிமா என பிஸியாக வலம் வந்தவர். தனது படங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்தவர். 
 

25
vikram

தொடர்ந்து படங்கள் நடித்து வந்த கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக கடந்த 2018ஆம் விஷ்வ ரூபம் திரைப்படம் வெளியானது. இதையடுத்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு, தற்போது மீண்டும் கைதி, மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கம்பேக் கொடுத்துள்ளார்.  இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

35
vikram

இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

45
vikram

இந்த திரைப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசனை இன்னும் சில நாட்களில் திரையில் காணப்போகிறோம் என்ற உற்சாகத்தில் இருக்கின்றனர் அவரது ரசிகர்கள். படத்திற்கான புரொமோஷனில் கமல்ஹாசன் பிஸியாக இருக்க பட வியாபாரமும் அமோகமாக நடக்கிறது. இதையடுத்து, படத்தின் அடுத்தடுத்த அப்டேட் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. 
 

55
vikram

அதன்படி, படம் ரிலீஸுக்கு முன்பே ப்ரீ புக்கிங்கில்  ரூ. 200 கோடி வரை வசூலித்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், அதன் OTT சாட்டிலைட் என வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த வசூல் மிக பெரிய வரவேற்பாக பார்க்கப்படுகிறது. மேலும், வெளியாகி மிக பெரிய வசூல் மழையை பொழியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

 மேலும் படிக்க ....Vikram: விக்ரம் படத்தில்...கத்திரி போட்டு தூக்கிய அடல்ட் வசன காட்சிகள்...? வெளியான சென்சார் கட் ரிப்போர்ட்....

Read more Photos on
click me!

Recommended Stories