'ஜவான்' படத்தில் நடிக்க ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம்!

Published : Sep 07, 2023, 09:57 PM IST

'ஜவான்' திரைப்படத்தில் நடித்த, ஷாருகான் முதல்.. யோகி பாபு வரை முக்கிய பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
19
'ஜவான்' படத்தில் நடிக்க ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம்!

ஷாருக்கான் நடிப்பில், அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜவான், இன்று  சர்வதேச அளவில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி,  தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபலங்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

29
Shah Rukh Khan

 

ஷாருக்கான் இரட்டை வேடத்தில் இப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார். 'ஜவான்' படத்தில் நடிக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக பெற்றுள்ள நிலையில், கூடுதலாக, அவர் இப்படத்தின் லாபத்தில் இருந்து 60% பங்கைப் பெறுவார் என கூறப்படுகிறது.

சீரியல் நடிகை மகாலக்ஷ்மியின் கணவர் ரவீந்திரன் அதிரடி கைது! 16 கோடி மோசடி செய்தது நிரூபணம்!

39
Nayanthara:

 

ஜவான் படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகியுள்ள நயன், இந்த படத்தில் நடிப்பதற்காக ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

49
Vijay Sethupathi:

தமிழ் சினிமாவின் நம்பிக்கைகூறிய நட்சத்திரங்களில் ஒருவரான இவர், 'ஜவான்' படத்தில் தன்னுடைய ஸ்டைலிஷான மற்றும் தரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக இவர் சுமார் 21 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

'பிக்பாஸ் சீசன் 7' இரண்டாவது வீட்டில் தங்கவைக்கப்படும் 4 பிரபலங்கள் இவர்களா? மொத்த போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ
 

59
Deepika Padukone:

'ஜவான்' படத்தில் ஒரு  சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் தீபிகா படுகோன். சில நிமிடங்கள் மட்டுமே,வந்தாலும்  தன்னுடைய தரமான ஆக்ஷன் காட்சிகளிலால் மிரட்டியுள்ளார். இவர் இந்த படத்தில் நடிக்க ஹீரோயின் நயன்தாராவை விட கூடுதலாக  சுமார் 15 முதல் 30 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 

69
Sanya Malhotra:

சன்யா முதல் முறையாக ஷாரூக்கானுடன், ஜவான் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் நடித்ததற்காக 3 கோடி ரூபாய் இவர் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கோடி கோடியாய் குவிக்கும் ரஜினியின் ஜெயிலர்.. அள்ளி அள்ளி தானம் செய்யும் சன் குடும்பம் - காவேரி கொடுத்த செக்!

79
Priyamani:

'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திற்குப் பிறகு, பிரியாமணியும் ஷாருக்கானும் இந்தத் திட்டத்திற்காக மீண்டும் இணைகின்றனர். இந்த படத்தில் நடித்ததற்காக இவர் ரூ.2 கோடி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

89
Sunil Grover:

சுனில் குரோவர், ஜவான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில நிமிடங்களே இவருடைய காட்சிகள் இடம்பெறுகிறது. எனவே 'ஜவான்' படத்திற்காக 75 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.

40 வருட திரையுலக பயணம்! இறப்பதற்கு முன்பே சொத்துக்களை எழுதிய கணவர்.! மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
 

99
Yogi Babu:

ஜவானுக்கு முன் ஷாருக்கானின் வெற்றிப் படமான சென்னை எக்ஸ்பிரஸில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் யோகி பாபு. தமிழ் படங்களில் நடிக்க 1 கோடி கேட்பதாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் நடிக்க யோகி பாபுவுக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
 

Read more Photos on
click me!

Recommended Stories