Samuthirakani Salary: மவுஸு கூடிய சமுத்திரக்கனி...டான் படத்திற்கு கோடிகளில் வாங்கிய சம்பளம்..எவ்வளவு தெரியுமா?

First Published Jun 15, 2022, 12:01 PM IST

Samuthirakani Salary: டான் படத்தில் நடித்ததற்காக சமுத்திரக்கனி ரூ 1 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

samuthirakani

சமுத்திரக்கனி, தமிழில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான நாடோடிகள் படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமானவர்.  பின்னர் போராளி, நிமிர்ந்து நில், அப்பா, வினோதய சித்தம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை  படங்களை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக ஜொலித்தார்.
 

samuthirakani

இயக்குனராக மட்டுமின்றி அப்பா, சாட்டை போன்ற படங்களின் மூலம் தான் ஒரு தலைசிறந்த நடிகன் என்பதை நிரூபித்து காட்டினார்.  வெற்றிமாறனின் விசாரணை படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. தற்போது நடிப்பில் பிசியாகி உள்ள அவர், கோலிவுட், டோலிவுட் என கலக்கி வருகிறார். இவர் கைவசம் தற்போது, இந்தியன் 2, டான், அந்தகன், ஆர்.ஆர்.ஆர், பீம்லா நாயக், சர்காரு வாரி பட்டா, மாறன், நான் கடவுள் இல்லை என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. 

samuthirakani

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் கூட, சமுத்திரக்கனி நடித்திருந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த டான் படத்தில் நடிப்பதற்காக நடிகர் சமுத்திரக்கனி சுமார் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

samuthirakani

சமீப காலமாக சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்ததால், தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்துயுள்ளாராம். இதற்கு முன்பு, ஒரு படத்திற்கு அவர் 50 லட்சம் வரை வாங்கியுள்ளார். டான் படத்திலும் சமுத்திரக்கனியின் அப்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து தன்னுடைய சம்பளத்தை அவர் அதிரடியாக உயர்த்தியுள்ளாராம்.

மேலும் படிக்க....Trisha: நயன்தாரா ரூட் கிளியர்...அடுத்து த்ரிஷா திருமணம் எப்போது..? இணையத்தில் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..

click me!