இத்தனை கோடியா? மகன் ப்ரீ வெட்டிங்கில் நடனமாடிய பிரபலங்களுக்கு பணத்தை வாரி இறைத்த முகேஷ் அம்பானி..

First Published Mar 6, 2024, 12:36 PM IST

இந்த நிகழ்வில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே கலந்து கொண்டதால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என 3 நாட்களுமே களைகட்டியது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

மார்ச் 1 முதல் 3 வரை பல நூறு கோடி செலவில் நடந்த இந்த கோலாகல நிகழ்ச்சியில் இந்திய திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர். பல நூறு கோடி செலவில் நடந்த ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு பேசு பொருளாக மாறியது. 

இந்த நிகழ்வு முடிந்து 3 நாட்களாகியும் இதுதொடர்பான தகவல்கள் வெளியான வண்னம் உள்ளன. குறிப்பாக இந்த நிகழ்வில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே கலந்து கொண்டதால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என 3 நாட்களுமே களைகட்டியது.

அதிலும் ஆனந்த் - ராதிகாவின் சங்கீத் நிகழ்ச்சி தான் இதில் ஹைலைட் என்றே கூறலாம். பிரபல பாப் பாடகி ரிஹானாவின் நடனம், முகேஷ் - நீதா அம்பானியின் கலக்கல் நடனம், ஆனந்த் - ராதிகாவின் ரொமாண்டிக் டான்ஸ் ஆகியவை பார்ப்பவர்களை உற்சாகப்படுத்தியது. 

இந்த உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக பல பாலிவுட் பிரபலங்களும் மேடை ஏறி நடனமாடினர். இதற்காக அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் தம்பதிக்கு ரூ.3 கோடி நடனமாட வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே போல் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடிக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு இந்த நிகழ்வில் பங்கேற்க ரூ.1.5 கோடியும், நடனமாட தனியாக ரூ.3.5 கோடி வழங்கப்பட்டதாம். அதே போல் சல்மான் கான் பங்கேற்க ரூ.2 கோடியும், நடனமாட தனியாக ரூ.3 கோடியும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நடிகர் ஷாருக்கானுக்கு நடனமாட மட்டும் ரூ.3 கோடி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

click me!