தமிழகத்தில் இன்று முதல் 18ம் தேதி வரை கனமழை கொட்டும்.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

First Published Jan 13, 2024, 11:32 AM IST

தமிழகத்தில் இன்று முதல் வரும் 18 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. வரும் 15 ஆம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விலகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Rain Update

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் காலை வேலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரங்களில் சென்னையில் வெயில் அடிக்கிறது.

Tamilnadu weather

இந்த நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

Weather update

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

Today rain update

நாளை முதல் 18.01.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Tamilnadu heavy rain

நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மாலத்தீவை விடுங்க பாஸ்.. நம்ம அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! டிக்கெட் விலை கம்மிதான்!!

click me!