Air Fryer : ஏர் பிரையர் என்றால் என்ன..? அதில் சமைப்பது நல்லதா.. கெட்டதா..??

First Published Apr 16, 2024, 11:36 AM IST


ஏர் பிரையரில் உணவு சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

'ஏர் பிரையர்' பற்றி நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். மக்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமானது. இன்று காலகட்டத்தில் பலர் தங்களது வீடுகளில் பழமையான சமையல் முறையை விட்டுவிட்டு ஏர் பிரையர் மூலம் சுவையான உணவை சமைக்கிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில், ஏர் பிரையரில் உணவு சமைப்பது பாதுகாப்பானதா.? அது ஆரோக்கியத்திற்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா... இல்லையா...? என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தத் தொகுப்பில் ஏர் பிரையர் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்..

ஏர் பிரையர் என்றால்?: ஏர் பிரையர் என்பது டிரை குக்கிங் மெத்தட் மூலம் குறைந்த எண்ணெயில், சூடான காற்றின் உதவியுடன் உணவு  
சமைக்கப்படுகிறது. இதனால் உணவை ரொம்ப நேரம் சமைக்கவோ அல்லது வறுக்கவோ வேண்டாம்.

ஏர் பிரையர் நன்மைகள்: ஏர் பிரையரில் பல நன்மைகள் உள்ளன. இதன் மூலம் குறைந்த எண்ணையில், விரைவாகவும், பல வகையான உணவுகளையும் சமைக்கலாம். அதுமட்டுமின்றி சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவையும் இதன் மூலம் தயாரிக்கலாம்.

இதையும் படிங்க:  ஏர் பிரையரில் அலுமினியத் தாளை வைத்து சமைப்பது பாதுகாப்பானதா?
 

ஏர் பிரையர் தீமைகள்: அதிக வெப்ப நிலையில் உணவு சமைக்கப்பட்டால் அது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை சேதப்படுத்தும். அதுமட்டுமின்றி, மாவு சத்துள்ள உணவை அதிக வெப்ப நிலையில் சமைப்பதால் 'அக்ரிலாமைடு' என்ற சேர்மம் உருவாகும். இது புற்றுநோய் வழி வகுக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!