Health Tips : காலை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?

First Published Mar 28, 2024, 4:09 PM IST

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்களின் காலை உணவு மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்கள் நாளுக்கு தேவையான ஆற்றலை காலை உணவின் மூலமே பெற முடியும். எனவே, நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கும் என்பதால் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எலுமிச்சை நீரில் தேன்: எலுமிச்சம்பழ நீரில் தேன் கலந்து கொழுப்பை எரிக்க உதவும் என்று நம்புவதால் பலர் காலையில் உட்கொள்ளும் ஒரு பொதுவான பானமாகும். இருப்பினும், தேனில் அதிக கலோரிகள் உள்ளன மற்றும் சர்க்கரையை விட கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமாக உள்ளது. இதனால் காலையில் வெறும் வயிற்றில் தேனை சாப்பிட வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.. எந்த சேர்க்கைகளும் இல்லாத சுத்தமான தேனைக் கண்டுபிடிப்பது கடினம், பெரும்பாலானவர்கள் தேன் என்ற பெயரில் சர்க்கரை மற்றும் அரிசி சிரப்பை சாப்பிடுகிறார்கள். இது உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தேநீர் மற்றும் காபி: வெறும் வயிற்றில் டீ அல்லது காபி உட்கொள்வது வயிற்றில் அமிலங்களைத் தூண்டுகிறது, இது உங்கள் வயிற்றைக் குழப்பி செரிமானப் பிரச்சினைகளை உண்டாக்கும் என்றும் உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காலை எழுந்ததும் உங்கள் கார்டிசோல் (அழுத்த ஹார்மோன்) அளவுகள் ஏற்கனவே அதிகமாக இருக்கும். இந்த சூழலில் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் அதில் உள்ள காஃபின் கார்டிசோல் அளவை மேலும் உயர்த்தும்.  காலை எழுந்த பிறகு குறைந்தது ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்கு பின் காபி அல்லது டீயை எடுத்துக் கொள்ளலாம். .

fruits

பழங்கள்:

மற்ற உணவுப் பொருட்களை ஒப்பிடும்போது பழங்கள் மிக விரைவாக ஜீரணமாகும். இது ஒரு மணி நேரத்திற்குள் நமக்கு பசியை உண்டாக்கும். சில சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

காலை வெறும் வயிற்றில் இனிப்புகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஆனால் அதே நேரம் புரதம் மற்றும் கொழுப்பை அடிப்படையாகக் கொண்ட காலை உணவு நாள் முழுவதும் பசியைக் குறைக்க உதவுகிறது.

click me!