GV Prakash : அந்த பிரச்சனையால நானும் தனுஷும் 6 வருஷம் பேசாமல் இருந்தோம்.. ஜி.வி. பிரகாஷ் ஓபன் டாக்..

First Published Apr 6, 2024, 2:30 PM IST

தனக்கும் நடிகர் தனுஷ்க்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளார் ஜி.வி பிரகாஷ்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா, ஏ.ஆர். ரெஹானாவின் மகன் தான் ஜி.வி. பிரகாஷ். 2006-ம் ஆண்டு வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஜிவி பிரகாஷ். அப்போது அவருக்கு வயது வெறும் 19 தான். வெயில் படத்தில் ஜிவி பிரகாஷின் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

GV Prakash Kumar

இதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. கிரீடம், பொல்லாதவன், குசேலன், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், மயக்கம் என்ன, தலைவா, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார்.

இதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் என்ற அடையாளத்தை மாற்றி முன்னணி இசையமைப்பாளராக மாறினார். குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜிவி பிரகாஷின் இசை மாஸ்டர் பீஸ் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அந்த படத்துடன் சேர்ந்து ஜிவி பிரகாஷின் இசையும் பெரிதாக பேசப்படவில்லை. எனினும் ஆயிரத்தில் ஒருவன் படம் ரீ ரீலிஸ் செய்யப்பட்டது ரசிகர்கள் அந்த படத்தைஇயும், ஜி.வியின் இசையையும் கொண்டாட தீர்த்தனர்.

GV prakash kumar

தொடர்ந்து பல ஹிட் படங்களில் இசையமைத்து வந்த ஜி.வி பிரகாஷ்க்கு சூரரை போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. ஒருவழியாக பல ஆண்டுகளுக்கு பிறகு ஜி.வி பிரகாஷ்க்கு கிடைத்த அங்கீகாரமாகவே இது பார்க்கப்பட்டது.

இதனிடையே நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய ஜி.வி பிரகாஷ், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பென்சில், கடவுள் இருக்கான குமாரு, நாச்சியார், டார்லிங், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் உருவான கள்வன் படம் நேற்று முன் தினம் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் தனக்கும் நடிகர் தனுஷ்க்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளார் ஜி.வி பிரகாஷ். இதுகுறித்து தனியார் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் “ இரண்டு நண்பர்கள் இருந்தால் அதில் சண்டையும் வரும். பின்னர் புரிதலும் வரும். இதெல்லாம் சகஜம் தான். அப்படி தான் எனக்கும் தனுஷ்-க்கும் பிரச்சனை வந்தது. இதனால் 6 ஆண்டுகள் பேசாமல் இருந்தோம். இப்போது எல்லா பிரச்சனையும் சரியாகிடுச்சு. இப்போ நாங்க இருவரும் நல்ல நண்பர்கள்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ தனுஷுடன் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். அவருக்கு விரும்பும் நபர்களுக்கு உதவ எந்த எல்லைக்கும் செல்வார். தனுஷை போல் யாரும் இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

2007-ம் ஆண்டு வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன் படத்தின் மூலம் தனுஷ் - ஜிவி பிரகாஷ் இருவரும் ஒன்றாக பணியாற்றினர். தொடர்ந்து ஆடுகளம், மயக்கம் என்ன மற்றும் அசுரன் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினர்.. அப்போது தனுஷுக்கும் - ஜிவி பிரகாஷ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.

ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த தனுஷ் – ஜிவி பிரகாஷ் மீண்டும் தங்கள் நட்பை புதுப்பித்து மீண்டும் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். வாத்தி, கேப்டன் மில்லர் படங்களில் தனுஷ் - ஜிவி பிரகாஷ் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி அமரன், தனுஷ் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களுக்கும் ஜி.வி பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!