வீட்டில் உள்ள குட்டீஸ்கள் ஆர்வம் பட்டாசு மீது இருந்தாலும், இளம் பெண்களுக்கு மற்றவர்களை விட வித்தியாசமான டிரஸ் அணிய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
ஒல்லியாக, இருக்கும் பெங்களுக்கு ஓரளவு அணைத்து விதமான ட்ரெஸ்களும் சூட் ஆகும் என்றாலும், குண்டாக இருப்பவர்கள் தங்கள் ட்ரெஸ்ஸிங்கில் அதிகம் கவனம் செலுத்துவார்கள்.
48
காரணம் குண்டாக இருக்கும் தங்களை ஒல்லியாக காட்டக்கூடிய விதத்தில் டிரஸ் அணியவே அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பலருக்கு எந்தெந்த உடைகள் நம்பை ஒல்லியாக காட்டும் என்பது தெரியாது.
குட்டையான டாப் அணிவதை விட... லாங் டாப் மற்றும் கழுத்து தெரியாதது போல் உங்கள் சல்வார் மற்றும் பிளவுஸ் இருந்தால் அது உங்களை ஒல்லியாக காட்டும். காலர் வைத்த உடைகளும் குண்டாக இருப்பவர்களுக்கு மேலும் அழகாக்கும்.
88
மாடர்ன் டிரஸ் அணியும் போது, நீங்கள் போடும் உடை ஸ்லீவ் லெஸ்சாக இருக்க கூடாது. அது உங்களின் பப்பி தோற்றத்தை அப்படியே வெளிப்படுத்தும். அதே போல் உங்களின் ஹேர் ஸ்டைலிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினார் உங்களை அழகிலும், ஸ்டைலிலும் அடிச்சிக்க முடியாது கேள்ஸ்...