Dharsha Gupta : அந்த இடத்தில் குத்திய டாட்டூ தெரிய... சைடு போஸில் செக்ஸி லேடியாக போஸ் கொடுத்த தர்ஷா குப்தா

First Published May 5, 2024, 1:42 PM IST

நடிகை தர்ஷா குப்தா, பச்சை நிற ஆடையில் பம்பரம் போல் சுழன்று சுழன்று கவர்ச்சி போஸ் கொடுத்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகிறது.

dharsha gupta

சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலம் போய், தற்போது வீட்டில் இருந்தபடியே வாய்ப்புகளை பெறும் நிலைமை வந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்கள் தான். முன்பெல்லாம் போட்டோக்களுடன் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக சென்று வாய்ப்பு தேடுவர், ஆனால் தற்போது சோசியல் மீடியாவில் பேமஸ் ஆனாலே போதும், வாய்ப்பு உங்கள் வீட்டை தேடி வந்துவிடும்.

dharsha gupta photos

அந்த வகையில் சோசியல் மீடியா மூலம் பேமஸ் ஆகி இன்று கோலிவுட்டில் ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் தர்ஷா குப்தா. கோவையை சேர்ந்தவரான இவர், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விதவிதமாக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டார். இளசுகளை பெரிதும் கவர்ந்த அந்த புகைப்படங்களால் அவருக்கு இன்ஸ்டாவில் மில்லியன் கணக்கில் பாலோவர்களும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... Gabriella Sellus : சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா தொடங்கிய புது பிசினஸுக்கு கிடைக்கும் செம்ம ரெஸ்பான்ஸ்..!

dharsha gupta hot photos

இன்ஸ்டா மூலம் பேமஸ் ஆன தர்ஷா பின்னர் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் நடித்த அவர், பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் தர்ஷாவுக்கு சினிமா சான்ஸ் கிடைத்தது.

dharsha gupta Stunning Photoshoot

அந்த வகையில் ருத்ர தாண்டவம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான தர்ஷா குப்தா, அடுத்த படத்திலேயே சன்னி லியோன் உடன் நடித்தார். இவர்கள் இணைந்து நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தர்ஷா குப்தா நடிப்பில் தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

dharsha gupta latest Photos

இப்படி நடிப்பில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவரும் விதமாக போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற கவர்ச்சி உடையில் செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நல்ல வேள அவர் நடிக்கல... கில்லி படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோவின் தந்தையா?

click me!