யாரும் எதிர்பாராத விதமாக, அடுத்த மாதம் தனக்கு காதல் திருமணம் நடைபெற உள்ள தகவலை அறிவித்த பாலாவிடம், அங்கிருந்த மாணவர்கள் உங்கள் காதலி யார் என கேட்டபோது... சிரிப்பையே தன்னுடைய பதிலாக அளித்தார். எனினும் விரைவில், பாலா திருமணம் குறித்த மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலா கூறிய இந்த தகவலை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.