10 ஆயிரம் பட்ஜெட்டில் பெரிய டிஸ்பிளே, 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்கள்..

First Published Feb 18, 2024, 7:59 PM IST

இந்தியாவில் 10000க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல் போன்கள் மற்றும் அதன் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை காணலாம்.

Best Phones Under 10000

ரெட்மி 13சி (Redmi 13C) ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh வரை நீடிக்கும் பேட்டரி மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதம். 8ஜிபி ரேம் மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் வருகிறது. 50எம்பி + 2எம்பி + 2எம்பி டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 5எம்பி முன்பக்கக் கேமரா மூலம் அசத்தலான செல்ஃபிகளை எடுக்க முடியும். இதன் விலை ரூ.7,999 மட்டுமே.

Realme Narzo N55

ரியல்மி நார்சோ என்55 (Realme Narzo N55) ஆனது 6.72 இன்ச் திரை, வலுவான 5000mAh பேட்டரி பேக்கப் மற்றும் 90Hz டிஸ்ப்ளே, 48ஜிபி ரேம் மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட்டை வழங்குகிறது. 64MP + 2MP கேமரா மற்றும் 8MP முன் கேமரா வருகிறது. கைரேகை சென்சார் வசதியுடனும் இது வருகிறது. இதன் விலை 9,749 ரூபாய் ஆகும்.

Realme C51

ரியல்மி சி51 (Realme C51) டிஸ்ப்ளே அளவு 6.74 இன்ச், நீண்ட கால 5000mAh பேட்டரி பேக்கப் மற்றும் வேகமான 4GB ரேம். 50எம்பி மற்றும் 8எம்பி முன்பக்க கேமராவின் இரட்டை கேமரா உடன் வருகிறது. 64 ஜிபி உள் சேமிப்பகம், கைரேகை சென்சார் ஆகிய வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999 ஆகும்.

Itel A70

ஐடெல் ஏ70 (Itel A70) ஸ்மார்ட்போன் 6.60 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் நீண்ட கால 5000mAh பேட்டரி பேக்கப் மற்றும் சூப்பர் ஸ்மூத் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் யுனிசாக் டி603 சிப்செட் உடன் வருகிறது. இது Android 13 இல் இயங்குகிறது. 256GB உள்ளக சேமிப்பகம், கைரேகை சென்சார் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.6,799 ஆகும்.

Realme Narzo N53

ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53) 6.78 இன்ச் டிஸ்ப்ளே, 5000எம்ஏஎச் வரை நீடிக்கும் பேட்டரி மற்றும் 90ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. 4ஜிபி ரேம் மற்றும் யுனிசாக் டி612 சிப்செட், 50எம்பி கேமரா ஆகியவை மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 13, 64ஜிபி சேமிப்பகத்தையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.7,999 மட்டுமே.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

click me!