பச்சை பாலில் இந்த மூணுல ஏதாவது ஒன்னு கலந்து யூஸ் பண்ணுங்க.. முகம் பளபளப்பாகுமாம்..!

Published : Jul 02, 2024, 01:36 PM ISTUpdated : Jul 02, 2024, 01:47 PM IST

Raw Milk Face Pack For Glowing Skin : பச்சைபாலில் செய்யப்பட்ட ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தினால், பொதுவான சரும பிரச்சனைகளை அகற்றவும், பளபளப்பான சருமத்தையும் கொடுக்கும் தெரியுமா..?

PREV
17
பச்சை பாலில் இந்த மூணுல ஏதாவது ஒன்னு கலந்து யூஸ் பண்ணுங்க.. முகம் பளபளப்பாகுமாம்..!

பெண்கள் தங்கள் முகத்தின் அழகை அதிகரிக்க விலையுயர்ந்த பல பொருட்களை பயன்படுத்திகின்றனர். ஆனால், அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அப்போ, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா..?

27

இதற்கு பச்சைபாலில் செய்யப்பட்ட ஃபேஸ் பேக்குகளை உங்கள் முகத்திற்கு பயன்படுத்துங்கள். இது பொதுவான சரும பிரச்சனைகளை அகற்றவும், பளபளப்பான சருமத்தை உங்களுக்கு கொடுக்கும் தெரியுமா..?

37

பால் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் இதில் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், புரதம் மற்றும் லாக்டிக் அமலம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது சருமத்திற்கு ஈரப்பதம் மற்றும் கொலாஜன் உற்பத்திக்கு ஊக்குவிக்க உதவுகிறது. 

47

நீங்கள் ஒளிரும் சருமத்தை பெற விரும்பினால், உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் பச்சை பாலில் ஃபேஸ் பேக்களை பயன்படுத்துங்கள். எனவே இந்த கட்டுரையில் பச்சை பாலில் என்னென்ன ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம், என்பதை குறித்து பார்க்கலாம்.

57

பச்சைப்பால் தேன் மற்றும் லெமன்: இந்த சைஸ் பக் தயாரிக்க ஒரு பாத்திரத்தில் ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் பச்சை பால், ஒரு ஸ்பூன், தேன் மற்றும் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் நன்கு கலந்து, அந்த பேஸ்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவினால், சருமம் மென்மையாகவும், பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும்.

இதையும் படிங்க:  பச்சை பாலில் ஒரு சிட்டிகை இத கலந்து சருமத்தில் தடவுங்க.. குளிர்காலத்தில் அந்த பிரச்சனைகள் வராது!

67

பச்சைப்பால் மற்றும் ஊற வைத்த பாதாம்: இந்த ஃபேஸ் பேக் செய்ய பாதாமை இரவு முழுவதும் பச்சை பாலில் ஊற வைக்கவும் மறுநாள் காலை அதை, அரைத்து அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாகும்.

இதையும் படிங்க: முகம் தங்கம் போல மினுமினுங்க  அன்னாசி பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

 

77

பச்சைப்பால் மற்றும் மஞ்சள்: இந்த ஃபேஸ் பேக் செய்ய ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் பச்சைப்பால் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து, அந்த பேஸ்ட்டே முகம் மற்றும் கழுத்தில் தடவி, சுமார் 15 நிமிடங்கள் கழித்து தண்ணீர் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Read more Photos on
click me!

Recommended Stories