தமிழ் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களையும், குணச்சித்திர வேடங்களையும் தேர்வு செய்து நடித்து பிரபலமானவர் விசித்ரா. இதுவரை சுமார் 80-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, மலையாளம், போன்ற பிற மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படத்தில் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய இவர், தற்போது மீண்டும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மிகவும் சாமர்த்தியமாக விளையாடி வருகிறார். குறிப்பாக சீனியர் நடிகர் - நடிகைகள் வந்தால் ஓரிரு வாரத்தில் வெளியே அனுப்பும் மக்கள் விசித்ராவின் விளையாட்டை வியந்து பாராட்டி வருகின்றனர். ஒரு சீனியர் நடிகைக்கு இந்த அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் ஆதரவு தெரிவித்து வருவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2000-ஆம் ஆண்டு நான் பெரிய ஹீரோவின் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தேன். தன்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த அந்த நடிகர், என்னுடைய ரூமுக்கு நைட் வா என கூறினார். நான் செல்லவில்லை. ஹோட்டல் அறையில் நன்கு தூங்கி விட்டேன். அதற்கு மறாவது நாளில் இருந்து நடிகரின் ஆட்கள் என்னை டார்கெட் செய்து, நான் தங்கி இருந்த அறையின் கதவைத் தட்டி டார்ச்சர் செய்ய துவங்கினர். அந்த நேரத்தில் தனக்கு உதவியது அப்போது ஹோட்டலில் மேனேஜராக இருந்த என்னுடைய கணவர் தான் என தெரிவித்திருந்தார்.
செய்யும் இடத்தில், அதற்கான மரியாதை இல்லாவிட்டால் ஏன் அந்த வேலையை செய்ய வேண்டும் என முழுமையாக திரைப்படம் நடிப்பதில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்தார். விசித்ரா கூறிய இந்த சம்பவம் குறித்து, சமூக வலைத்தளத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் youtube சேனல் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியில் விசித்ரா சொல்வது அணைத்தும் சுத்த பொய் என கூறி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவர் கூறியுள்ளதாவது, விசித்ரா கூறிய விஷயம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். "2000 ஆம் ஆண்டு நடந்த இந்த விஷயம் பற்றி விசித்ரா இப்போது கூறுவதற்கு காரணம், என்ன என்பதை யோசிக்க வேண்டும். மன்சூர் அலிகான் விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவதால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதே போன்ற ஒரு கான்செப்ட்டை பிளான் செய்து எக்ஸிக்யூட் செய்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விசித்ரா ரூம் ரூமாக மாறி தங்கி இருந்தேன் அதற்கு உதவியது அப்போது மேனேஜராக இருந்த தன்னுடைய கணவர் என இப்போது சொல்கிறார். ஏன் அப்போது அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. அதேபோல் இப்போது இந்த விஷயத்தை சொல்ல காரணம் என்ன என பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். அதேபோல் அந்த நடிகர் யார் என சொல்ல தைரியம் இல்லாதவர் இதை ஏன் இப்போது சொல்கிறார் எல்லாமே பொய் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓட்டுக்களை வாங்குவதற்கு விசித்ரா இப்படி பேசி உள்ளார் என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.