மகளைப் பார்த்ததும் மீனாட்சி திகைத்து நிற்க, கனி யார் நீங்க என்ன வேண்டும் என்று கேட்க, தண்ணி கேட்க வந்ததாக சொல்ல, கனியும் தண்ணீர் கொண்டு போய் கொடுக்கிறாள். வீட்டில் ஏற்பாடுகள் தடபடலாக இருக்க, மீனாட்சி என்ன விஷயம் என்று கேட்க, கனி பெரிய மனுஷியாகி விட்ட விஷயத்தை சொல்லி பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ என சொல்ல, மீனாட்சி காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள் கனி.
அதன் பிறகு பாக்கியத்தை பார்த்து இது உங்க பொண்ணா என்று மீனாட்சி கேட்க, இல்ல என் அண்ணன் பொண்ணு என பாக்கியம் பதில் சொல்கிறாள். இவங்க அம்மா இல்லையா என்று கேட்க, அவங்க அம்மா இப்போ வீட்ல இல்ல என்று சொன்னதும், கனி தான் தன்னுடைய மகள் என்பதை உறுதி செய்து கொள்கிறாள்.