Aditi Rao Siddharth: விவாகரத்து; முன்னணி நடிகைகளுடன் காதல்; 44 வயதில் அதிதி ராவை கரம் பிடித்த சித்தார்த்!!

Published : Mar 27, 2024, 03:26 PM ISTUpdated : Mar 27, 2024, 08:28 PM IST

நடிகர் சித்தார்த், விவாகரத்தான பல வருடங்கள் கழித்து நடிகை அதிதி ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

PREV
18
Aditi Rao Siddharth: விவாகரத்து; முன்னணி நடிகைகளுடன் காதல்; 44 வயதில் அதிதி ராவை கரம் பிடித்த சித்தார்த்!!
siddharth

இயக்குனர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பணியாற்றிய பின்னர், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் சித்தார்த். 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் ஒரு பஸ் பேசஞ்சராக நடித்த சித்தார்த்தை, இயக்குனர் சங்கர் தான் 'பாய்ஸ்' திரைப்படத்தில் கதாநாயகனாக மாற்றினார். முதல் படத்திலேயே இவருடைய கதாபாத்திரம் மற்றும் துருதுருப்பான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
 

28

'பாய்ஸ்' படத்தில் தன்னுடைய கெரியரை துவங்கிய உடனேயே, 2003-ஆம் ஆண்டு மேக்னா என்பவரை சித்தார்த் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த சித்தார்த், ஆயுத எழுத்து திரைப்படத்தில் அர்ஜுன் பாலகிருஷ்ணன் என்கிற மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்தார். பின்னர் தெலுங்கில் பிஸியான சித்தார்த், தொடர்ந்து அதிகப்படியான தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

பாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் உடையில் அட்லீ மனைவி பிரியா! குதூகல ரொமான்டிக் போட்டோஸ்!
 

38

இவர் பிஸியாக நடித்து வந்த நிலையில், தன்னுடைய மனைவி மேக்னாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் நடிகை ஸ்ருதிஹாசனுடன் 'ஓ மை பிரண்ட்' என்கிற படத்தில் நடித்த போது, இருவரும் ஏற்பட்ட பழக்கம், காதலை கடந்து 'லிவிங் டூ  கெதர்' ரிலேஷன்ஷிப் வரை சென்றது.
 

48

பின்னர் ஸ்ருதிஹாசனிடம் இருந்து விலகிய சித்தார்த், ஒரு சில வருடம் கழித்து.. நடிகை சமந்தாவுடன் விளம்பர படம் ஒன்றில் நடிக்கும் போது அவரை காதலிக்க துவங்கினர். இந்த தகவல் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தீயாக பரவி வந்தாலும், இருவருமே காதலை வெளிகாட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இந்த காதலும் பிரேக்கப்பில் தான் முடிந்தது. 

ஸ்ருதி ஹாசனுடன் கட்டி பிடித்து ரொமான்ஸ் செய்த லோகேஷ் கனகராஜ்..! நடிகை ஆண்ட்ரியா ரியாக்ஷன் என்ன தெரியுமா?
 

58

ஒருமுறை சமந்தா சித்தார்த் உடனான ரிலேஷன்ஷிப் குறித்து சூசகமாக பேசிய போது, நல்ல வேலை நான் தப்பித்து விட்டேன் இல்லை என்றால் சாவித்திரியின் வாழ்க்கை போல் என் வாழ்க்கையும் ஆகியிருக்கும் என தெரிவித்திருந்தார். இப்படி அடுத்தடுத்து பல காதல் சர்ச்சைகளில் சிக்கி வந்த சித்தார்த், கடந்த சில வருடங்களுக்கு முன் தெலுங்கு படத்தில் அதிதி ராவுடன் நடிக்கும் போது இருவரும் காதலிக்க துவங்கினர்.
 

68

 இருவரும் மும்பையில் ஒன்றாக சுற்றி வந்த நிலையில், தொடர்ந்து தங்களுடைய காதலை குறித்து வெளிப்படையாக பேசாமல் மௌனம் சாதித்து வந்தனர். செய்தியாளர்கள் இவர்களின் காதல் குறித்து கேள்வி எழுப்பினால், தங்களுடைய பர்சனல் குறித்து எந்த கேள்வியும் எழுப்ப வேண்டாம் என வேண்டுகோள் ஒன்றையும் வைத்தனர். இந்நிலையில் இவர்களுடைய திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Anikha surendran: 19 வயசுலேயே இப்படியா? ஹீரோயின் ஆனதும் சேலை மாராப்பை சரிய விட்டு... கவர்ச்சி காட்டும் அனிகா!
 

78

அதன்படி அதிதி மற்றும் சித்தார்த் ஜோடி ரகசியமாக தெலுங்கானாவில் உள்ள வனபத்தினியில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் இது சித்தார்த் மற்றும் அதிதி இருவருக்குமே இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

88
Aditi Rao Hydari, Siddharth

தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் சித்தார்த், கடந்த ஆண்டு தயாரித்து நடித்த 'சித்தா' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படமாக இருந்தது.

Robo Shankar : மகள் இந்திரஜாவின் திருமணத்திற்கு இவ்வளவு விலையுயர்ந்த காரை சீதனமாக கொடுத்தாரா ரோபோ ஷங்கர்?
 

click me!

Recommended Stories