Bollywood : "ஐயய்யோ நான் குடிக்க மாட்டேன்" - ஆல்கஹாலை பார்த்தாலே அலறும் டாப் 8 பாலிவுட் நடிகர்கள்!!

First Published May 4, 2024, 9:46 AM IST

Bollywood Celebrities : குடிப்பழக்கம் என்பது பரவலாக சிலரிடம் உள்ள ஒரு பழக்கம் தான். அதற்கு சினிமா நட்சத்திரங்களும் விதிவிலக்கல்ல. ஆனால் எவ்வளவு தான் பணம் இருந்தாலும் சில நடிகர், நடிகைகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதில்லை.

Amitabh Bachchan

அந்த வகையில் பாலிவுட் உலகில் புகழின் உச்சியில் பயணித்து வந்தாலும், குடிப்பழக்கத்தை அறவே தவிர்க்கும் டாப் 8 நட்சத்திரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் வருபவர் 81 வயதிலும் நடிப்பில் அசத்தும் அமிதாப்பச்சன் தான். 90களின் துவக்கத்திலேயே இவர் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டாராம். 81 வயதிலும் அவர் ஆரோக்கியமாக இருக்க அதுவும் ஒரு காரணமாம்.

Trisha : பூவுக்கு பிறந்தநாள்.. 40ஐ எட்டிய கோடீஸ்வர கோலிவுட் குயின் த்ரிஷா - சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Akshay Kumar

அக்ஷய் குமார், இவருக்கு வயது 56 என்றாலும், 30 வயது வாலிபனின் உடற்கட்டை கொண்ட ஒரு ஹீரோ இவர். எப்போது தனது உடலை அதிக கவனத்துடன் பார்த்துக்கொள்ளும் அக்ஷய், பல கலைகளை கற்றவர், இவருக்கும் மது மற்றும் புகைபிடிப்பது அறவே பிடிக்காதாம்.

John Abraham

நடிகர் ஜான் ஆபிரகாம் பற்றி அனைவருக்கும் தெரியும், அவர் சிறுவயதில் இருந்து பல சண்டை பயிற்சிகளை முறையாக கற்றுத் தேர்ந்தவர். 51 வயதாகும் ஜான் ஆபிரகாம் கடந்த 25 ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் வெள்ளை சர்க்கரையை நினைத்துக் கூட பார்த்ததில்லையாம். அப்படிப்பட்ட அவர் மது மற்றும் புகைப் பழக்கத்தில் இருந்து விலகியே இருக்கிறார். 

Deepika Padukone

பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தீபிகா படுகோனே. 38 வயது நிரம்பிய இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ரன்வீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் தீபிகா படுகோனே, மது மற்றும் புகை பழக்கத்தில் இருந்து விளக்கியுள்ளார்.

Abhishek Bachchan

48 வயதாகும் அபிஷேக் பச்சனுக்கும் தனது தந்தையைப் போல குடி மற்றும் புகைப் பழக்கம் ஆரம்பத்தில் இருந்து கிடையாது. பாலிவுட் உலகில் நல்ல பல படங்களை நடித்து புகழ் மிகுந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அபிஷேக்.

Parineeti Chopra

கடந்த 2023 ஆம் ஆண்டு தனது திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த நடிகை தான் பரினீதி சோப்ரா. மிகப்பெரிய தொழிலதிபர் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் இவருக்கும் புகை மற்றும் மதுப்பழக்கம் அறவே கிடையாது.

Sonu Sood

தமிழ் திரைப்படங்கள் மூலம் கலை உலகில் அறிமுகமான சோனு சூட், திரைப்படங்களில் வில்லனாக நடித்தாலும் மக்களுக்கு ஒரு நிஜ உலக ஹீரோவாகத் தான் திகழ்ந்து வருகிறார். 50 வயதை கடந்துவிட்ட இவர், தனது உடலை மிகவும் கச்சிதமாக பராமரிக்கும் மனிதர்களில் ஒருவர். இவருக்கும் மது மற்றும் புகைப் பழக்கம் கிடையாது.

Sonakshi Sinha

பிறக்கும் பொழுது செல்வ செழிப்போடு பிறந்த ஒரு நடிகை தான் சோனாக்ஷி, 36 வயது நிரம்பிய சோனாக்ஷி தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய லிங்கா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கும் குடி மற்றும் புகைப் பழக்கம் கிடையாதாம். 

STAR : சினிமாவில் எனக்கு மிஞ்சியது தோல்வியே.. ஆனா என் மகன் நிச்சயம் ஜெயிச்சுருவான் - பிரபல நடிகர் உருக்கம்!

click me!