Shruti Haasan Attend Shop opining Function:
கோவை காந்திபுரம் பகுதியில் பிரபல தனியார் துணிக்கடையின் திறப்பு விழாவில், உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் கலந்து கொண்டு அந்த கடையை ஓப்பன் செய்து வைத்து பார்வையிட்டார்.
Shruti wear Sarees Feel Positive:
நான் வழக்கமாக கருப்பு நிற உடை, மார்டன் உடை தான் அணிவேன், ஆனால் புடவை அணிந்தால் positive feeling வரும் என கூறினார். எனக்கு பெரும்பாலும் எனது தந்தை தான் புடவைகளை பரிசளித்திருப்பார், ஆனால் அவர் பெரும்பாலும் மஞ்சள் வெள்ளை நிறத்தில் புடவை எடுப்பார் நான் அவரிடம் கருப்பு அல்லது கருநீலம் நிறத்தில் புடவைகள் எடுத்து தரும்படி கேட்பேன் என்றார்.
No One Competition for Father:
அவரிடம் அப்பாவை வைத்து படம் இயக்குவதை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு ஐயையோ என தலை சுற்றுவது போல் பதிலளித்தார். மேலும் அப்பாவிடம் யாரும் competition வைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
Not Interest in political:
அரசியல் ஈடுப்பாடு குறித்த கேள்விக்கு, இல்லை என ஒரே வார்த்தையில் நெற்றி பொட்டில் அடித்தது போல் பதிலளித்தார். தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் இந்திய பெண் கதாபாத்திரத்தை எடுத்து நடித்திருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது எனவும் அதுமட்டுமின்றி அந்த படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர், வசன கர்தா அனைவருமே பெண்கள் என்பதால் அது போன்ற ஒரு குழுவுடன் இணைந்தது மிகவும் அழகான ஒன்றாக அமைந்துள்ளது என்றார்.
ஜனனி - சக்தி இடையே வெடித்த புது பிரச்சனை! ஈஸ்வரி கூறிய உண்மையால் ஜீவானந்தம் எடுக்க போகும் முடிவு என்ன?
Shruti Acting Hollywood Movies:
இந்திய திரைப்படங்களுக்கும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை மொழி மட்டுமே மாறுகிறது என கூறினார். மேலும் வாய்ப்பு கிடைத்தால், விஜய், அஜித் என அனைவருடனும் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D